
கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் பாதுகாப்பு உதவியாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் காலியாகவுள்ள 13 பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் பாதுகாப்பு உதவியாளர் பணி - Cochin Shipyard Limited
இந்திய அரசின் பட்டியலிடப்பட்ட முன்னணி 'மினி ரத்னா' நிறுவனமான கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் காலியாகவுள்ள 13 பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விவரங்களை பார்ப்போம்...
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: CSL/P&A/RECTT/CON TRACT/SAFETY ASSISTANT/2024/1
பணி: Safety Assistant
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.23,000
தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Fire and Safety பிரிவில் டிப்ளமோ படித்து ஒரு ஆண்டு பணி அனு பவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 22.7.2026 தேதியின்படி 45-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடற்தகுதித் தேர்வு, தொழிற்திறனை நிரூபிக்கும் செய்முறைத்தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் மருத்துவத்தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வுகள் பற்றிய விபரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200 மட்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.7.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
CSL invites Online Applications from Indian citizens fulfilling the eligibility requirements, for filling up of the following seats of Safety Assistant...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






