ரயில்வேயில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!
தெற்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
By இணையதளச் செய்திப் பிரிவு
Venkatesan
தெற்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவுப்பு எண். RRC/SCR/Sports Quota/04/2025
பணி: Sports person(Sports Quota 2025-26)
விளையாட்டுப் பிரிவுகள் வாரியான காலியிடங்கள் விவரம்:
தடகளம் - 8, குத்துச்சண்டை - 4, கூடைப்பந்து - 3, கிரிக்கெட்- 9, ஷட்டில் பேட்மிண்டன் - 2, சைக்கிளிங் -1, எடை தூக்குதல் - 4, ஹாக்கி - 2, ஜிம்னாஸ்டிக்ஸ் - 4, கைப்பந்து - 6, கபடி - 2, வாலி பால் - 4, கோ-கோ - 4, பவர் லிஃப்டிங் - 3, வில்வித்தை - 3
வயதுவரம்பு: 1.1.2026 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியுடன் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் விளையாடி குறைந்தது மூன்றாவது இடம் பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும். பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு முடித்தவர்களுக்கு கூடுதல் கிரேடு சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டுத் தகுதி மற்றும் விளையாட்டு சாதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விவரம் மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரயில்வேயில் முதுநிலை கிளார்க், இளநிலை கிளார்க் ஆக பணியமர்த்தப்படுவர். 1.4.2023 தேதிக்கு பிந்தைய விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள், சிறுபான்மையினருக்கு ரூ.250. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.scr.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.11.2025
Apply now... South Central Railway Recruitment 2025
செபியில் உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது