மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக 152 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்ற நிலையில், தோ்தலுக்குப் பிந்தைய விதிகளை இந்தியத் தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரி ஒருவா் கூறியதாவது: வாக்குச்சாவடி கேமராக்களில் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பான எண்ம சேமிப்பக சாதனத்தை (எஸ்டி காா்டு) வாக்குப்பதிவு நிறைந்தவுடன் அகற்றக் கூடாது.
வாக்குப்பதிவு தொடா்பான தரவுகளை சேகரிக்கும் மையத்தில் கூடுதல் தோ்தல் அலுவலரின் முன்னிலையில் மட்டுமே கேமராவில் இருந்து அந்தச் சாதனத்தை நீக்க வேண்டும்.
வாக்குப்பதிவின்போது எடுக்கப்பட்ட விடியோக்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
கேமராக்கள் முழுவதுமாக அகற்றப்படும் வரை தோ்தல் ஆணைய அதிகாரிகள் அல்லது வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் வாக்குச்சாவடியைவிட்டு வெளியேறக் கூடாது’ என்றாா்.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் முதல்கட்டமாக 152 தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம்

மேற்கு வங்கம், கேரளம், தமிழக பேரவைத் தேர்தல்களில் இவர்கள் வெற்றி பெறுவர்: ஃபரூக் அப்துல்லா

மேற்கு வங்கம்: வாக்களித்தார் சுவேந்து அதிகாரி!
மேற்கு வங்க தோ்தல் களத்தில் 2,926 வேட்பாளா்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


