மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இப்ப எம்எல்ஏ தொகுதி மீது ஏன் ஆர்வம்? 2 ஆவது முறையாகப் போட்டி!

News image

விசிக தலைவர் தொல். திருமாவளவன் (கோப்புப் படம்) - யூடியூப்

Updated On :30 மார்ச் 2026, 10:09 pm

காட்டுமன்னார்கோவில் சட்டப் பேரவைத் தொகுதியில் 2016 தேர்தலில் தொல்.திருமாவளவன் போட்டியிட்டு வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் நாக. முருகுமாறன் வெற்றிபெற்றார்.

87 வாக்குகளில் இழந்த தொகுதியை பிடிக்க தற்போது காட்டுமன்னார் கோவில் (தனி) தொகுதியில் தொல்.திருமாவளவன் மீண்டும் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

மக்களவை உறுப்பினராவது தனது கனவு எனக் கூறி வந்த தொல்.திருமாவளவன், தனது கனவை நிளைவாக்கும் வகையில் 3 முறை எம்.பி.யாக தேர்ச்சி பெற்றார். இந்த நிலையில் தற்போது சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது கட்சியினர் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விசிகவின் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:

மாநில அரசியலில் தனது செல்வாக்கை அதிகரிக்கவும். கூட்டணிக் கட்சியின் அமைச்சரவையில் பங்கேற்பதற்காகவும் சட்டப் பேரவைத் தேர்தலில் தொல்.திருமாவளவன் போட்டியிடுவதாக தெரிவித்தனர்.

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட கட்சியின் பழைய நிர்வாகிகள் பலர் வாய்ப்பு கேட்டு நெருக்கடி கொடுத்ததால், தானே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் என மேலும் சில நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.