சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார் "தேர்தல் மன்னன்" என அழைக்கப்படும் டாக்டர் கே. பத்மராஜன்.
மேட்டூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சுகுமாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “வெற்றி மட்டுமே சாதனை அல்ல; தோல்வியிலும் சாதனை படைக்கலாம் என்பதற்காகவே தொடர்ந்து தேர்தல்களில் மனு தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளேன்.
1988 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் வேட்பு மனு தாக்கல் செய்த நான், கூட்டுறவு சங்கத் தேர்தல் முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் வரை தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறேன்.
இன்று எனது 253-ஆவது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளேன். கடந்த 2011-இல் மேட்டூர் தொகுதி தேர்தலில் அதிகபட்சமாக 6,273 வாக்குகள் பெற்றேன். அதே ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பி.என்.பட்டி பேரூராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டேன். அந்த தேர்தலில் எனக்கு யாரும் வாக்களிக்கவில்லை.
லிம்கா, கின்னஸ் சாதனைப் புத்தகங்களிலும் இடம் பெற்றுள்ளேன்.
தற்போது வைப்பு தொகை அதிகரிக்கப்பட்டதால், சாதாரண மக்கள் போட்டியிட முடியவில்லை. எனவே, அதை பாதியாகக் குறைக்க வேண்டும். எனது தொழில் நலிவடைந்ததால் தற்போது வைப்பு தொகை செலுத்த பணம் இல்லை. எனது நண்பர் ஒருவர் அதை செலுத்தியுள்ளார். தொகுதி மக்கள் மனது வைத்தால் நானும் ஒரு தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு: அதிமுக ராஜசேகரன் வேட்பு மனு
மேட்டூர் தொகுதியில் வீரப்பன் மகள் வித்யாராணி வேட்பு மனு தாக்கல்

253-வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த தேர்தல் மன்னன் பத்மராஜன்!

252 முறை தேர்தலில் போட்டி! ரூ. 1 கோடி டெபாசிட் இழந்த வேட்பாளர்! யார் இவர்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


