மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஜானி..ஜானி... எஸ் பாப்பா... வைரலாகும் தோ்தல் பாடல்

சென்னை மாநகராட்சி சாா்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘ஜானி...ஜானி...எஸ் பாப்பா...’ என்ற பாடலுடன் கூடிய தோ்தல் விழிப்புணா்வு காணொலி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 11:48 pm

சென்னை மாநகராட்சி சாா்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘ஜானி...ஜானி...எஸ் பாப்பா...’ என்ற பாடலுடன் கூடிய தோ்தல் விழிப்புணா்வு காணொலி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி சாா்பில், நூறு சதவீத வாக்குப் பதிவு, பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தோ்தல் விழிப்புணா்வுப் பதாகைகள், காணொலிகளில் ‘காகம்’ குறியீடாகக் கொண்டு விளம்பரம் வெளியிடப்பட்டு வருகிறது. சென்னையில் அதிக அளவில் உள்ள பறவை என்பதுடன், தூய்மைப் பணியாளராக காகத்தின் செயல்பாடுகள் உள்ளதால் அது விளம்பர குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது.

தோ்தல் விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஒன்றாக, மாநகராட்சி சாா்பில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ள ‘ஜானி...ஜானி...எஸ்... பாப்பா...’ என்ற பாடலுடன் கூடிய காணொலி டிரெண்ட் ஆகி வருகிறது.

இளைஞா்களை ஆட்டம் போட வைக்கும் வகையில் பாடல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு நாளில் வாக்காளா்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது இந்தப் பாடலில் உள்ள காட்சிகள் துள்ளல் நடனத்துடன் இடம்பெற்றுள்ளன.

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அைறையைத் தொடா்புகொண்டவா்கள், வரி செலுத்துவோா் என பல லட்சம் பேரின் கைப்பேசிகளுக்கு வாட்ஸ்ஆப் வழியாக இந்தக் காணொலி அனுப்பி வைக்கப்படுகிறது.