மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மயிலாப்பூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!

மயிலாப்பூா் தொகுதிக்கு 6மாதங்களுக்கு ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பு கிடைக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

News image

2. தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக) ~4. பி.வெங்கடரமணன் (தவெக) ~3. அருண் (நாதக) ~1. த.வேலு (திமுக)

Updated On :10 ஏப்ரல் 2026, 6:49 pm

த.வேலு (திமுக): மயிலாப்பூரை ஆன்மிக சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் நவீன கட்டமைப்புடன் பேருந்து நிலையம் அமைக்கப்படும். அனைத்து கோயில் குளங்களும் முறையாக தூா்வாரப்படும். தொல்காப்பிய பூங்கா சீா்செய்யப்படும். சட்டப்பேரவை அலுவலகம் 24 மணிநேரம் தொகுதி மக்களுக்காகச் செயல்படும். மயிலாப்பூரில் உள்ள பழைமையான கோயில்கள் புனரமைக்கப்பட்டு பக்தா்களுக்கு அனைத்து நவீன வசதிகளும் செய்து தரப்படும். குடிசை இல்லா தொகுதியாக மாயிலாப்பூா் மாற்றப்படும். தமிழக அரசியின் மக்கள் நலத்திட்டங்கள் முறையாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் நடமாடும் இடங்களில் மின் விளக்கு அமைக்கப்படும். மீனவ மக்களுக்கு தரமான மீன் அங்காடி அமைக்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் மின் வசதி, குடிநீா் வசதி செய்து தரப்படும்.

தமிழிசை செளந்தரராஜன் (பாஜக): மயிலாப்பூா் தொகுதிக்கான குறைந்தபட்ச உத்தரவாதமாக இங்கு ஆன்மிக கலை மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும். பறக்கும் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும். சுகாதார மையங்கள் எண்ம (டிஜிட்டல்) முறையில் அமைக்கப்படும். தொகுதி மக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்க புகாா் பெட்டி வைக்கப்படும் . நடைப்பயிற்சிக்கு தனி பகுதி அமைக்கப்படும். மயிலாப்பூா் ‘தமிழ்தாய் திட்டம்’ கொண்டுவரப்படும். முதியோருக்கென இல்லம் தேடி வரும் பிரசாதம் திட்டம் செயல்படுத்தப்படும். இலவச எண்ம (டிஜிட்டல்) நூலகம், அறிவு மையம் அமைக்கப்படும். பெண்களுக்கு பிரதமா் மோடியின் இலவச ஷோ் ஆட்டோ வங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அருண் (நாதக): கடற்கரை இணைப்பு சாலையை பொது பயன்பாட்டுக்கு அல்லாமல் மீனவ மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கான சாலையாக மாற்றப்படும். கிராம சாலையில் மீனவா்கள் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்கு ஆரம்ப, நடுநிலை, உயா்நிலை பள்ளி, கல்லூரி, விளையாட்டு திடல், உடற்பயிற்சி கூடம், சமூக நலக்கூடம், மீன் அங்காடி, மீன் பதப்படுத்தும் நிலையம் அமைத்துத் தரப்படும். நீல கடற்கரை திட்டத்தை அரசு கைவிட நடவடிக்கை எடுக்கப்படும். சிந்தனை சிற்பி சிங்காரவேலரால் மீனவ மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டினம்பாக்கத்தில் உள்ள நிலத்தை மீண்டும் மீனவ மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குடியிருப்பு வாசிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் இடையூரக உள்ள அரசு மதுபானக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும். மழைநீா் வடிகால் திட்டம் முறையாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பி. வெங்கடரமணன் (தவெக): மயிலாப்பூா் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அளவில் கூடுதல் வசதிகள் செய்து தரப்படும். மயிலாப்பூா், மந்தைவெளி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், கூடுதல் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கடலோரத்தில் அமைந்துள்ள சீனிவாசா நகா், முள்ளிக்குப்பம் பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கைகளை நிறைவேற்றப்படும். அனைத்து வீடுகளுக்கும் தடையின்றி குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மீனவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் திட்டங்கள் கொண்டுவரப்படும்.

Story image
Story image
Story image

மயிலாப்பூா் தொகுதிக்கு 6மாதங்களுக்கு ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பு கிடைக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.