தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தவெக 108 இடங்களைப் பெற்றும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தொங்கு சட்டப்பேரவை உருவாகியுள்ளது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கும் நிலையில் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை கோரியிருந்தது.
இதற்கிடையில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சியாக செயல்படுவதில்தான் விருப்பம் எனத் தெரிவித்திருக்கும் நிலையில், திமுகவின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கும் முனைப்பில் அதிமுக பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக விசிக, இடதுசாரிகள் தனித்தனியாக அவர்களது கட்சி செயற்குழுக் கூட்டங்களில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
Is this outside government and alliance with the DMK continues? Or breakaway from the DMK+ alliance as well?
— . (@anbaepogathe) May 8, 2026
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த நிலையில், நேற்று ஆதரவு கேட்டு வந்த தவெக இணை பொதுச்செயலர் சி.டி.ஆர். நிர்மல் குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு வருகை தந்து ஆதரவு கோரியிருந்தார். தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்துள்ளது.
தவெக 108 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் 5 எம்.எல்.ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட் தலா 2 எம்.எல்.ஏக்கள் என தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது.
இன்னும் இரண்டு எம்.எல்.ஏக்கள் தேவையாகவுள்ள நிலையில், விசிகவினர் இன்று மாலை இணைய வழி ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர். அவர்களும் தங்களது ஆதரவு கடிதத்தை வழங்குவார்களா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
Summary
The Marxist Communist Party has announced unconditional support to the Tamilaga Vettri Kazhagam for forming a new government in Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜக + திமுக + அதிமுக எனும் கொள்கை புடலங்காய்! திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. பதிலடி!

புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? ஆனால், மீண்டும் தோல்விதான்: மார்க்சிய கம்யூ.

மார்க்சிய கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக ஆர். செல்லசுவாமி தேர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு!
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan





