தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பிரசாரத்தின்போது தண்டவாளத்தில் படுத்த மன்சூர் அலிகான்! ஏன்?

மன்சூர் அலிகான் தண்டவாளத்தில் படுத்தது பற்றி...

News image

மன்சூர் அலிகான் - X

Updated On :31 மார்ச் 2026, 7:23 am

லால்குடி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், பிரசாரத்தின்போது திடீரென்று தண்டவாளத்தில் படுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் லால்குடி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட நடிகர் மன்சூர் அலிகான் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், லால்குடி தொகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கல்லக்குடி ரயில் நிலையத்தில் இன்று காலை மன்சூர் அலிகான் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது தண்டவாளத்தில் இறங்கிய மன்சூர் அலிகான், குறுக்கே படுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் போராட்டத்தின் நினைவாக படுத்ததாக தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், ”முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் லால்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். யாரும் தராததால் சுயேச்சையாகப் போட்டியிடுகிறேன்” எனத் தெரிவித்தார்.

இவர், 1999 முதல் 4 முறை மக்களவைத் தேர்தலிலும், ஒரு முறை சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Mansoor Ali Khan Lies Down on Railway Tracks During Campaign!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.