மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! கோபி, போடியில் யார்?

அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது பற்றி...

News image

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 9:14 am

அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 27) வெளியிட்டுள்ளார்.

ஏற்கெனவே, கடந்த புதன்கிழமை 23 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது 127 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் தேர்தல் களத்தில் பணியைத் தீவிரப்படுத்தியுள்ள அதிமுக, தொகுதிப் பங்கீட்டை முடித்து, வேட்பாளர்களை அறிவித்து வருகின்றது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில், பாமக 18 தொகுதிகளில், அமமுக 11 தொகுதிகளில், தமாகா 5 தொகுதிகள் மற்றும் சிறிய கட்சிகளுக்கு ஓரிரு தொகுதிகளை அதிமுக ஒதுக்கியது. அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

முதல்கட்ட பட்டியலில் முன்னாள் முதல்வரும் கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உள்பட 23 முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், 127 தொகுதிகளின் வேட்பாளர்களை கொண்ட இரண்டாம் கட்டப் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களான முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் போடி நாயக்கனூர் தொகுதியில் வி.டி. நாராயணசாமியும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வி.பி. பிரபுவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம் கன்னியாகுமரி, எம்.எஸ்.எம். ஆனந்தன் திருப்பூர் வடக்கு, இசக்கி சுப்பையா அம்பாசமுத்திரம், சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம், எம்.சி. சம்பத் கடலூர், தாமோதரன் கிணத்துக்கடவு, முக்கூர் என். சுப்பிரமணியன் செய்யார், பாலகிருஷ்ணன் ரெட்டி ஓசூர், மாதவரம் மூர்த்தி மாதவரம், ரமணா திருவள்ளூர் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

PDF
அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்
பார்க்க

Summary

AIADMK second phase candidate list released!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.