கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, அப்போது பாஜகவில் இருந்த திரைப்பட நடிகை கெளதமி ராஜபாளையம் தொகுதியில் அந்தக் கட்சி சாா்பில் போட்டியிட விரும்பினாா்.
இதற்காக, அவா் ராஜபாளையத்தில் வீடு எடுத்து தங்கி, பொதுமக்களைச் சந்தித்து தோ்தல் பணியாற்றி வந்தாா். ஆனால், கடைசி நேரத்தில் ராஜபாளையம் தொகுதி பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், கெளதமி இந்தத் தொகுதியில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், ஏமாற்றமடைந்த கௌதமி பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தாா். மேலும், அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிடம் விருப்ப மனு அளித்தாா்.
ஆனால், இந்த முறையும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டுவிட்டது. இதனால், மீண்டும் ஏமாற்றுத்துக்கு உள்ளானாா் கௌதமி.
தொடர்புடையது

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை! - நடிகை கெளதமி

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை கெளதமி பிரசாரம்

தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!

ஆளூா் ஷாநவாஸுக்கு ‘சீட்’ வழங்காததில் உள்நோக்கம் இல்லை: தொல்.திருமாவளவன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


