தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வாக்காளர்களே... உங்கள் வாக்குச்சாவடி விவரங்களை அறிந்து கொள்வது எப்படி?

உங்கள் வாக்குச்சாவடி விவரங்களை அறிந்து கொள்வது எப்படி? என்பதைப் பற்றி...

News image

பெண் வாக்காளர்கள்...

Updated On :22 ஏப்ரல் 2026, 6:08 am

வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி விவரங்களை அறிந்து கொள்வது எப்படி? என்பதைப் பற்றி இந்தியத் தேர்தல் ஆணையம் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாளை (ஏப்.23) 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று மாலை பிரசாரம் ஓய்ந்த நிலையில், வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்குத் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட வெளி நகர்களில் பணியாற்றுபவர்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்துக்குப் பின்னர் நடைபெறும் தேர்தல் என்பதால், பலரும் வாக்களிக்க முனைப்பு காட்டி வருகின்றன. மேலும், வாக்கு சதவிகிதத்தையும் உயர்த்தும் நோக்கில் வாக்குச் சாவடி அலுவலர்கள் மூலமாக வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

வெளியூர்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் வாக்காளர் தகவல் சீட்டுகளைப் பெறாதோர் வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்து கொள்வதற்கான வழிமுறைகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, https://electoralsearch.eci.gov.in இணைய முகவரியிலோ அல்லது வாக்காளர் உதவி எண் செயலி அல்லது 1950 என்ற கட்டணமில்லா எண்ணைப் பயன்படுத்தியோ தங்களது வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பாக, வாக்குச்சாவடிக்குள் மொபைல், கேமரா, ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

தங்கள் பகுதிக்கு அருகே இருக்கும் வாக்குச்சாவடி பற்றிய விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் https://electoralsearch.eci.gov.in இணையதளத்தில் சென்று இந்தியத் தேர்தல் ஆணைய எண், முகவரி அடிப்படையில், மொபை எண் அடிப்படையில் வாக்குச்சாவடி விவரங்களைப் பெறலாம்.

Story image

எடுத்துக்காட்டாக, தகவல்கள் தொடர்பான தேடலில் பெயர், உறவினர் பெயர், வயது, மாவட்டம், சட்டப்பேரவைத் தொகுதி ஆகியவற்றை உள்ளீடு செய்து நமது வாக்குச்சாவடி தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

Summary

The Election Commission of India has issued guidelines on how voters can find out their polling station details.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.