மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மகளிர் உரிமைத் தொகையைப் பெற்றுத்தந்தது அதிமுகதான்! - எடப்பாடி பழனிசாமி

மகளிர் உரிமைத் தொகையைப் பெற்றுத்தந்தது அதிமுகதான் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதைப் பற்றி...

News image

எடப்பாடி பழனிசாமி - விடியோவிலிருந்து...

Updated On :10 ஏப்ரல் 2026, 1:02 pm

மகளிர் உரிமைத் தொகையைப் பெற்றுத்தந்தது அதிமுகதான் என்று அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடைபெற்றவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் மிகத் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியும் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிச்சாமி காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுவதற்காக காஞ்சிபுரம் வருகை புரிந்தார்.

முன்னதாக, பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி. சோமசுந்தரம், உத்திரமேரூர் தொகுதி பாமக வேட்பாளர் மகேஷ் குமார், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பழனி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “2021 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக, அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், குலவிளக்குத் திட்டத்தில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் ரூ. 1,500 வழங்கப்படும் என்று அதில் குறிப்பிட்டிருந்தோம்.

நாங்கள் உங்களது தேர்தல் அறிக்கையைக் காப்பி அடித்து வெளியிடவில்லை. நீங்கள்தான் எங்களுடைய தேர்தல் அறிக்கையைக் காப்பி அடித்து வெளியிட்டிருக்கிறீர்கள். ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றதும் அனைவரும் ரூ. 1,000-ஐ வழங்கிவிட்டாரா?

சுமார் 28 மாதங்கள் கழித்துத்தான் அனைவருக்கும் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நானும், என்னுடன் இருந்த சட்டப்பேரவையில் சக உறுப்பினர்களும் தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம்.

நீங்கள் ஏழை மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள். இரண்டு ஆண்டுகள் அனைவரையும் காக்க வைத்தீர்கள். நாங்கள் உங்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து உரிமைத் தொகையைப் பெற்றுக் கொடுத்திருக்கிறோம். உரிமைத் தொகையைப் பெற்றுத் தந்தது அதிமுகதான்.

இவ்வளவுகாலம் மக்களைப் பார்க்காமல், தேர்தல் நேரத்தில் அவருக்கு இந்த மக்களின் வாக்குகள் தேவை என்பதால் அவர்கள் உரிமைத் தொகை வழங்கியிருக்கின்றனர்” என்றார்.

Summary

AIADMK General Secretary and Leader of the Opposition, Edappadi Palaniswami, has stated that it was the AIADMK that secured the Magalir Urimai Thogai Scheme.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.