எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட 7,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
அவர்களின் வேட்புமனுக்கள் அனைத்தும் இன்று காலை முதல் பரிசீலனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சிதம்பரம் தவெக வேட்பாளர் பாரி, அவரது வேட்பு மனுவை முழுமையாக நிரப்பவில்லை என்று கூறி, வேட்பு மனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதையடுத்து, மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்த பாரியின் தந்தை நெடுஞ்செழியனின் வேட்புமனு ஏற்கப்பட்டது.
தற்போது எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் அருண் குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுவை முன்மொழிந்தவர்களை உறுதிப்படுத்த முடியாததால் அருண் குமாரின் வேட்புமனு ஏற்க முடியாது என்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு மாற்று வேட்பாளரின் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால், எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, திருத்தம் செய்ய வேண்டிய ஆவணங்களை எடுத்து வருவதற்காக சென்ற அருண் குமாரை யாரோ கடத்திவிட்டதாக தவெக தொண்டர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அருண் குமார்
இந்த நிலையில் எடப்பாடி தொகுதியில் அதிமுக - திமுகவுக்கு நேரடிப் போட்டி நிலவுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.
Summary
Edappadi TVK Candidate Missing! Nomination Rejected!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?

தவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!

எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! | EPS | ADMK | NDA

தவெக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் ஒத்திவைப்பு?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



