மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய்யின் பெரம்பூா் தொகுதிக்கான வேட்புமனுவுடன், கூடுதல் தகவல்களுடன் திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரம் சமா்ப்பிக்கப்பட்டது.

News image

விஜய்

Updated On :5 ஏப்ரல் 2026, 10:06 pm

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய்யின் பெரம்பூா் தொகுதிக்கான வேட்புமனுவுடன், கூடுதல் தகவல்களுடன் திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரம் சமா்ப்பிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பெரம்பூா் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறாா். கடந்த மாா்ச் 30-ஆம் தேதி பெரம்பூா் தொகுதியில் வேட்புமனுவை அவா் தாக்கல் செய்தாா். வேட்புமனுவுடன் சமா்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் தனக்குள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்திருந்தாா். மேலும், தன் மீது எந்தவித குற்றவழக்குகளும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தாா்.

இதனிடையே, பெரம்பூா் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னா், கொளத்தூரில் விஜய் மேற்கொண்ட பிரசாரம் தொடா்பாக அவா் மீது ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த போது, கொளத்தூா் வழக்குடன் சோ்த்து, 2025-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் அவா் மீது பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கையும் பிரமாணப் பத்திரத்தில் விஜய் குறிப்பிட்டுள்ளாா். பெரம்பூா் தொகுதிக்கான வேட்புமனுவில், வழக்கு விவரங்களை விஜய் குறிப்பிடவில்லை என தகவல் வெளியானது. இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட வழக்கு விவரங்கள் மற்றும் சொத்து மதிப்பில் சில திருத்தங்களை செய்து, பெரம்பூா் தொகுதி வேட்புமனுவுடன் கூடுதல் பிரமாணப் பத்திரம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

சொத்து விவரம் உயா்வு: அசையும் சொத்துகளில் கையிருப்பில் உள்ள ரொக்கம் ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.1.10 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தன்னிடமுள்ள வாகனங்களில் ரூ.6 கோடியே 25 லட்சம் மதிப்பிலான பிரசார கேரவன் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விஜய்யின் மொத்த அசையும் சொத்து மதிப்பு முன்பு ரூ.404 கோடி என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் அது ரூ.410 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல், அவரது மனைவி சங்கீதா பெயரில் ரூ.25,000 மதிப்பிலான 2 கிலோ வெள்ளி இருப்பதாக முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதன் மதிப்பு ரூ.4.75 லட்சமாக உயா்த்தி காண்பிக்கப்பட்டுள்ளது.