மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விஜய் பாதுகாப்பு! பதவியில் இல்லாத மத்திய செயலருக்கு கடிதம் எழுதிய தவெக!

விஜய்க்கு பாதுகாப்புக் கோரி பதவியில் இல்லாதவருக்கு தவெக கடிதம் எழுதியது பற்றி...

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப்படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 8:49 am

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பாதுகாப்புக் குறைபாடு இருப்பதாக மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவுக்கு தவெக நிர்வாகி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுகின்றது.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், கடந்த திங்கள்கிழமை பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கினார்.

பெரம்பூர், கொளத்தூரில் குவிந்த கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கண்டு வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவிருந்த பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு விஜய் பாதியிலேயே புறப்பட்டார்.

அப்போது பிரசாரம் மேற்கொள்ளும் பகுதிகளில் விஜய்யின் வாகனத்திற்கு போதிய காவல்துறை பாதுகாப்பு இல்லை என்றும் போக்குவரத்தைச் சரி செய்யாமல் இருப்பதால் பிரசாரம் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தவெக இணைப் பொதுச் செயலர் நிர்மல் குமார், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ள தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகக் கூறி, தவெக இணைப் பொதுச் செயலர் நிர்மல் குமார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் அனுப்பியதாக இணையத்தில் வெளியாகியிருக்கும் கடிதத்தில், மத்திய உள்துறை செயலாளர் என அஜய் குமார் பல்லாவின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2025 ஜனவரி மாதமே மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்ட அஜய் குமார் பல்லாவை உள்துறை செயலாளர் எனக் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மத்திய உள்துறை செயலாளராக 1989 ஆம் ஆண்டு சிக்கிம் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான கோவிந்த் மோகன் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

நிர்மல் குமாரின் கடிதம்

நிர்மல் குமாரின் கடிதம் - X

Summary

Vijay's Security! TVK Writes Letter to Former Union Secretary!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.