ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வினா - விடை வங்கி... விஜயநகரப் பேரரசு! - 3

விஜயநகரப் பேரரசு தொடர்பான வினா - விடைகள்...

The book includes details in depth — starting with how Hampi was under the edifice of Kalamukha and Pasupatha (a Shaivite section) in the early 12th century even before Krishnadevaraya took over.

ஹம்பி. - படம்: எக்ஸ்பிரஸ்.

Published On :3 ஜூன் 2026, 5:10 pm IST

1. போர்த்துகீசியருக்கு கோட்டை கட்டுவதற்கு கிருஷ்ண தேவராயர் அனுமதி கொடுத்த இடம் எது?

(a) பத்கல்

(b) ஹம்பி

(c) சந்திரகிரி

(d) வேலூர்

2. கிருஷ்ண தேவராயர் நிர்மானித்த நகரின் பெயர் என்ன?

(a) சந்திரகிரி

(b) விஜயநகரம்

(c) நாகலாபுரம்

(d) பெனுகொண்டா

3. கிருஷ்ண தேவராயர் மறைவுக்குப் பின் ஆட்சி செய்தவர் யார்?

(a) அச்சுத ராயர்

(b) சதாசிவ ராயர்

(c) ராமராயர்

(d) இரண்டாம் தேவ ராயர்

4. நுனிஸ் என்ற போர்த்துகீசியப் பயணி யாருடைய காலத்தில் இந்தியா வந்தார்?

(a) அச்சுத ராயர்

(b) கிருஷ்ண தேவராயர்

(c) ஹரிஹரர்

(d) புக்கர்

கிருஷ்ண தேவராயரின் சிறுவயது மகனின் பெயர் என்ன?

(a) சதாசிவ ராயர்

(b) திருமலை தேவ ராயர்

(c) அச்சுத ராயர்

(d) ராமராயர்

6. தலைக்கோட்டைப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?

(a) 1565

(b) 1526

(c) 1556

(d) 1576

7. தலைக்கோட்டைப் போர் எந்த பேரரசுகளுக்குக்கிடையே நடைபெற்றது?

(a) விஜயநகரப் பேரரசு - தக்காண சுல்தான்கள்

(b) விஜயநகரப் பேரரசு - தில்லி சுல்தான்கள்

(c) விஜயநகரப் பேரரசு - முகலாயர்கள்

(d) சோழர்கள் - பாண்டியா்கள்

8. தலைக்கோட்டைப் போரின் மற்றொரு பெயர் என்ன?

(a) சந்தேரி போர்

(b) கணுவா போர்

(c) ராக்‌ஷசாதங்கடிப் போர்

(d) சௌசா போர்

9. சதாசிவ ராயரின் உண்மையான அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த காப்பாளர் யார்?

(a) ராமராயர்

(b) திருமலர்

(c) அச்சுத ராயர்

(d) சாளுவ நரசிம்மர்

10. தலைக் கோட்டைப் போரில் அரச குடும்பத்தினர் தப்பிச் சென்ற இடம் எது?

(a) வேலூர்

(b) சந்திரகிரி

(c) பெனுகொண்டா

(d) மைசூர்

11. ஆரவீடு மரபைத் தோற்றுவித்தவர் யார்?

(a) திருமலர்

(b) ராமராயர்

(c) வெங்கடர்

(d) சதாசிவர்

12. வரி செலுத்தக் கோரி வேலூர் நாயக்கருடன் போரிட்ட ஆரவீடு மரபைச் சேர்ந்த மன்னர் யார்?

(a) பெரும்பேடு யச்சம நாயக்கர்

(b) இரண்டாம் வெங்கடர்

(c) ராமதேவர்

(d) ஸ்ரீரங்கர்

13. உத்திரமேரூர் போர் எந்தாண்டு நடைபெற்றது?

(a) 1601

(b) 1605

(c) 1612

(d) 1620

14. பொருத்துக...

வெளிநாட்டுப் பயணிகள் - நாடு

(i) இபின் பதுதா - A. மொராக்கோ

(ii) நிக்கோலோ கோண்டி - B. வெனீஸ்

(iii) நிகிடின் - C. ரஷியா

(iv) நுனிஸ், போர்பஸா, பயஸ் - D. போர்த்துக்கல்

(a) (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D

(b) (i)-B, (ii)-A, (iii)-D, (iv)-C

(c) (i)-C, (ii)-D, (iii)-A, (iv)-B

(d) (i)-D, (ii):C, (iii)-B, (iv)-A

15. பொருத்துக...

பதவிகள் பொறுப்புகள்

(i) மகா பிரதானி - முதல்வர்

(ii) தளவாய் - தளபதி

(iii) வாசல் - அரண்மனைப் பாதுகாவலர்

(iv) ராயசம் - செயலர் / கணக்கர்

(v) அடைப்பம் - தனி உதவியாளர்

(a) (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D, (v)-E

(b) (i)-B, (ii)-C, (iii)-A, (iv)-E, (v)-D

(c) (i)-C, (ii)-D, (iii)-E, (iv)-B, (v)-A

16. விஜயநகர பேரரசின் தங்க நாணயம் எது?

(a) ஜிட்டல்

(b) தங்கா

(c) வராகன் / பகோடா

(d) தினார்

17. விஜயநகர பேரரசின் நாணயத்தில் அச்சிடப்பட்டிருந்த உருவம் என்ன?

(a) கண்டபெருண்டா பறவை (இருதலைக் கழுகு)

(b) கருடன்

(c) சிங்கம்

(d) காளை

18. விஜயநகரப் பேரரசின் நாணயத்தில் எந்த எழுத்து வடிவம் அச்சிடப்பட்டிருந்தது?

(a) நகரி (தேவநாகரி) / கன்னடம்

(b) தமிழ்

(c) அரபி

(d) பாரசீகம்

19. விஜயநகரப் பேரரசில் வேதங்களுக்கு உரையெழுதியவர் யார்?

(a) சாயனர்

(b) வித்யாரண்யர்

(c) அப்பைய தீட்சிதர்

(d) வேதாந்த தேசிகர்

20. கிருஷ்ண தேவராயரின் சமஸ்கிருதப் படைப்புகள் யாவை?

(a) ஜாம்பவதி கல்யாணம்

(b) அபிஞான சாகுந்தலம்

(c) உஷாபரிணயம்

(d) (a) மற்றும் (c)

விடைகள்

  1. (a) பத்கல்

  2. (c) நாகலாபுரம்

  3. (a) அச்சுத ராயர்

  4. (a) அச்சுத ராயர்

  5. (b) திருமலை தேவ ராயர்

  6. (a) 1565 (ஜனவரி 23)

  7. (a) விஜயநகரம் - தக்காண சுல்தான்கள்

  8. (c) ராக்சசாதங்கடிப் போர்

  9. (a) ராமராயர்

  10. (c) பெனுகொண்டா

  11. (a) திருமலர்

  12. (b) இரண்டாம் வெங்கடர்

  13. (a) 1601

  14. (a)

  15. (a)

  16. (c) வராகன் / பகோடா

  17. (a) கண்டபெருண்டா பறவை

  18. (a) நகரி

  19. (a) சாயனர்

  20. (d) (a) மற்றும் (c) (அமுக்தமால்யதா என்பது தெலுங்குப் படைப்பு)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.