கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

நீட் மறுதேர்வு! நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதில் சிக்கலா? மாற்று வழிகள்!

நீட் மறுதேர்வுக்கான நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டால் மாற்று வழிகள் உள்ளன.

News image

கோப்புப்படம் - file photo

Updated On :15 ஜூன் 2026, 4:20 pm IST

நாடு முழுவதும் ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நீட் மறுதேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நீட் மறுதேர்வுக்கான நுழைவுக்கூடச் சீட்டு வெளியிடப்பட்டதாக தேசிய தேர்வு முகமை நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில், தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக மாணவர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தனர்.

இதற்கு தேசிய தேர்வு முகமை அளித்த பதிலில், தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. பிரச்னை சரி செய்யப்படுகிறது. மாணவர்கள் அனைவரும் விரைவாக நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாணவர்களுக்கு இது தொடர்பாக ஏற்பட்ட மன அழுத்தத்துக்கு வருந்துகிறோம் என்று பதிவிட்டிருந்தது.

நீட் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில்லை என்னென்ன சிக்கல்கள்?

ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட் (NEET-UG 2026) மறுதேர்வுக்கான அனுமதி அட்டைகளை தேசியத் தேர்வுகள் முகமை (NTA) வெளியிட்ட மறுநாளே, கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்கான சரிபார்ப்பு நடைமுறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் மறைந்துவிட்டதாகப் பல தேர்வர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் இணையதளத்தை அணுகியதால் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம்.

சிலருக்கு 503 சேவை கிடைக்கவில்லை, இன்டர்நெல் சர்வர் எரர், வெப்சைட் டைம் அவுட், பேஜ் நாட் லோடிங் என்பது போன்ற தகவல்கள் வருகின்றன.

நீட் நுழைவுத் தேர்வை இணையதளத்தில் மட்டுமல்ல, மாணவர்கள் டிஜி லாக்கர் மற்றும் உமங் செயலிகள் வழியாகவும் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லது மாணவர்கள் பல்வேறு வகையான லாகின் வாய்ப்புகளைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

விண்ணப்ப எண் + கடவுச் சொல் அல்லது விண்ணப்ப எண் + பிறந்த தேதி

நேரத்தை மாற்றுங்கள்

அதிகாலை நேரம், நள்ளிரவில் அல்லது பின் இரவு நேரத்தில் பதிவிறக்கம் செய்ய முயற்சிக்கலாம்.

இதுவரை செல்போனில் முயன்றிருந்தால் லேப்டாப் அல்லது கணினியில் முயற்சிக்கலாம். அல்லது கணினியில் முயன்றிருந்தால் லேப்டாப் அல்லது செல்போனில் முயற்சிக்கலாம்.

பிரவுசர்களை மாற்றலாம்

கணினியில் கூகுள் க்ரோம் பயன்படுத்தினால் மைக்ரோசாஃப்ட் எட்ஜ், மொசில்லா ஃபயர்பாக்ஸ் போன்றவற்றை மாற்றிப் பார்க்கலாம்.

இது அனைத்தும் மாணவர்கள் பக்கத்திலிருந்து பிரச்னைகள் இருந்தால் அதனை சரி செய்யும். அதிகாரப்பூர் தளத்தில் பிரச்னைகள் இருப்பின் பதிவிறக்கம் செய்வது இயலாது. இது அனைவருக்கும் பொதுவான பிரச்னைதான். எனவே மாணவர்கள் கவலை அடைய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

NEET Re-exam! Trouble downloading the admit card? Alternative options!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.