/

பொறியியல் கலந்தாய்வு எப்போது? தேதியை அறிவித்தார் அமைச்சர் விஸ்வநாதன்

பொறியியல் கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்ற தேதியை அறிவித்தார் அமைச்சர் விஸ்வநாதன்

News image

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் - ENS

Updated On :1 ஜூலை 2026, 12:07 pm IST

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஜூலை 13-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30 வரை நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் இன்று வெளியிட்டு முக்கிய விவரங்களையும் அறிவித்தார்.

சென்னை கிண்டியில் அமைந்துள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அலுவலகத்தில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கலந்தாய்வு தேதிகளையும் அமைச்சர் வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், ஜூலை 13-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30 வரை பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவித்தார்.

அதாவது, ஜூலை 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மாற்றுத் திறனாளிகள், அரசுப் பள்ளி சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.

ஜூலை 20-ஆம் தேதி முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும். இது ஒரு சில கட்டங்களாக ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

Summary

When is the engineering counseling? Minister Viswanathan announced the date.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.