ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முக்கிய பொறியியல் படிப்புகளுக்கு மீண்டும் வாழ்வு! 100% வேலை வாய்ப்பு

மெக்கானிக்கல் போன்ற முக்கிய பொறியியல் படிப்புகளுக்கு மீண்டும் மகத்துவம் ஏற்பட்டு, 100% வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பற்றி..

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம் - Center-Center-Chennai

Published On :3 ஆகஸ்ட் 2026, 3:01 pm IST

கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தால்தான் இனி வேலை என்று ஒரு காலத்தில் மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டு, முக்கிய பொறியியல் படிப்புகளுக்கான மகத்துவம் குறைந்து வந்த நிலை இந்த ஆண்டு மாறியிருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் அடிப்படையான பொறியியல் படிப்புகளை எடுத்துப் படித்த மாணவர்களுக்கு 100 சதவிகிதம் வேலை வாய்ப்பு கிடைத்திருப்பதாக தரவுகள் வெளியாகியிருக்கின்றன.

அதன்படி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல், மெக்கானிக்கல், இன்டஸ்ட்ரியல் பொறியியல், புரொடக்சன் பொறியியல், பிரிண்டிங் தொழில்நுட்பம், செராமிக் தொழில்நுட்பம் ஆகிய ஆறு படிப்புகளைத் தேர்வு செய்து படித்த அண்ணா பல்கலை மாணவர்கள் அனைவருக்கும் 2025 - 26ஆம் ஆண்டு வளாக நேர்காணல் மூலம் 100 சதவிகித வேலை வாய்ப்பு கிடைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்புகள் அனைத்தும் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.46 லட்சம் வரை வேறுபட்டுள்ளது. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் படித்தவர்களுக்கு அதிக சம்பளத்துடன் வேலை கிடைத்திருக்கிறது.

இதுபோன்று கோர் பொறியியல் எனப்படும் முக்கிய பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை சற்று மந்தமாகி வந்த நிலையில், கணினி பொறியியல் படித்தவர்களுக்குத்தான் இதுநாள் வரை அதிக வேலை வாய்ப்புகள் கிடைத்து வந்தன. இந்த ஆண்டு அது தலைகீழாக மாறியிருக்கிறது.

உற்பத்தித் துறையில் முன்னேற்றம், செமிகண்டக்டர் துறை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் தேவைப்படும் ஆள்கள் போன்றவை இந்த மாற்றத்துக்குக் காரணமாகியிருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.