டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

லாஸ் ஏஞ்சலீஸ்! சர்வதேச மாணவர்களுக்கான ஆர்ஐபிஎஸ் 2026 தொழில்துறை பயிற்சி!

லாஸ் ஏஞ்சலீஸில் சர்வதேச மாணவர்களுக்கான ஆர்ஐபிஎஸ் 2026 தொழில்துறை பயிற்சி பற்றி

News image
தொழில்துறை பயிற்சி
Updated On :3 பிப்ரவரி 2026, 12:26 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தொழில்துறை திட்டங்களில் ஆராய்ச்சி எனப்படும் RIPS திட்டங்கள், திறமையான இளங்கலை பயிலும் மாணவர்கள் தொழில்துறை அல்லது பொதுத்துறையின் தன்னார்வ அமைப்புகளால் செயல்படுத்தப்படும் ஆராய்ச்சி தொழில் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

ஒவ்வொரு மாணவர் குழுவும், அவர்களின் கல்வி வழிகாட்டி மற்றும் தொழில்துறை வழிகாட்டியின் மேற்பார்வையில், தொழில்துறைகளில் இருக்கும் பிரச்னையை ஆராய்ந்து, திட்டத்தின் முடிவில் வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் முடிவுகளை வழங்குவார்கள்.

RIPS திட்டத்திற்குப் பிறகு, சில மாணவர் குழுக்கள் தங்கள் முடிவுகளை வெளியிட அல்லது தேசிய மாநாடுகளில் வழங்கவும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஐபிஏஎம் (IPAM) ஒவ்வொரு இளங்கலை மாணவருக்கும் பரந்த அளவிலான வாய்ப்பையும் ஊக்கத்தையும் வழங்குகிறது.

இதில் பயிற்சி திட்டத்தில்:

உதவித்தொகை

பயண உதவித்தொகை

வளாகத்தில் தங்குமிடம் மற்றும் உணவு

ஸ்பான்சர்களுடன் தள வருகை (உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டது)

வெளிநாட்டு மாணவர்கள் (அமெரிக்காவில் படித்தால் மட்டுமே) தகுதியுடையவர்கள்

பட்டம் பெறும் மூத்த மாணவர்கள் தகுதியுடையவர்கள்

விண்ணப்பக் கடைசி தேதி

பிப்ரவரி 10, 2026 (பரிந்துரை கடிதங்கள் உள்பட விண்ணப்பத்துடன் தொடர்புடைய அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும்)

எந்தவொரு திட்டத்திலும் பங்கேற்க குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும்.

பெண்கள் மற்றும் பிரதிநிதித்துவம் குறைந்த சமூகங்களின் உறுப்பினர்கள் உள்பட அனைவரும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

RIPS-LA ஜூன் 26 - ஆகஸ்ட் 21, 2026 வரை செயல்படும். மாணவர்கள் UCLA வளாகத்தில் உள்ள குடியிருப்பு விடுதிகளில் தங்க வைக்கப்படுவர். மேலும் அவர்களது தொழில்நுட்ப ஆதரவு மற்றும் அலுவலகங்களும் உதவிகளை செய்யும். தற்போது ஐபிஏஎம்-இல் பணியாற்ற ஒன்பது திட்டங்கள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. ஆனால் ஸ்பான்சர்கள் மற்றும் திட்டங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.