புத்துலகைக் கட்டமைக்கும் பொறியியல் கல்வியின் வரிசையில் ஏற்றம் தரும் ஏரோநாட்டிகல் பொறியியல் கல்வி பற்றிய விவரங்கள்.
ஏரோநாட்டிகல் உருவான வரலாறு
கடந்த 1896- ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஜே. வெல்ஸ் என்பவர் தனது ஆய்வறிக்கையின் ஒரு பகுதியாக ஒரு சிறிய காற்றாலை சுரங்கப்பாதையை வடிவமைத்து கட்டியபோது, மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் வானூர்தி பொறியியலின் வரலாறு தொடங்கியது. விமானத்தை தூக்குதல் மற்றும் பராமரிக்கும் பணியை அடைய, ஏரோநாட்டிக்ஸ் அது சார்ந்திருக்கும் பல்வேறு துறைகளை உள்ளடக்கியது.
ஏரோநாட்டிக்கல், ஏரோஸ்பேஸ் உள்ளிட்டவை சிறப்பு பொறியியல் பிரிவுகளின் கீழ் வருகின்றன. வான்வெளியில் பறக்கக்கூடிய விமானம், ஹெலிகாப்டர், ட்ரோன் போன்ற சாதனங்கள் தொடர்பான படிப்பு ஏரோநாட்டிகல் என்ஜினீயரிங். செயற்கைக் கோள், ஏவுகணை உள்ளிட்ட விண்வெளிக்கு அனுப்பக்கூடிய சாதனங்களையும் சேர்த்து படிப்பது ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் ஆகும்.
படிப்புகள்
ஏரோநாட்டிக்கல் துறையில் பி.இ., பி.டெக்., டிப்ளமோ உள்ளிட்ட முறைகளில் படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. ஐஐடி-களில் இந்தப் பிரிவில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயிற்றுவிக்கப்படுகின்றன. மேலும் பல்வேறு வகையான தனியார் நிறுவனங்களும் துறை சார்ந்த படிப்புகளை வழங்குகின்றன.
இந்த துறையை தேர்ந்தெடுத்து படிக்க பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகியவை கொண்ட பாடப்பிரிவை எடுத்து, இதில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் உள்ள கல்லூரிகளில் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையிலும், ஐஐடி-களில் ஜேஇஇ நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
வேலைவாய்ப்பு
இந்தத் துறையை தேர்ந்தெடுத்து படிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. இந்தியாவில் ஏரோநாட்டிகல் என்ஜினீயரிங் முடித்தவர்கள் விமானத்துறை சார்ந்த அரசு அலுவலகங்களில் பணிபுரிய முடியும்.
இது தவிர, பாதுகாப்பு அமைச்சகம், இஸ்ரோ, சிவில் ஏவியேஷன், நேஷனல் ஏரோநாட்டிகல் லேபரட்டரி, அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்கள், விமான வடிவமைப்பு நிறுவனங்கள், விண்வெளி ஆய்வுத் துறை போன்ற நிறுவனங்களில் பணியில் சேர முடியும்.
இதர படிப்புகள்: பி.டெக். ஏரோநாட்டிகல் என்ஜினீயரிங் தவிர, பி.எஸ்சி. (ஏர்கிராஃப்ட் மெயின்டனன்ஸ், ஏவியானிக்ஸ்), பிபிஏ (ஃபிளைட் க்ரூ அண்ட் கிரவுண்டு க்ரூ), ஏர்கிராஃப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினீயரிங் (ஏஎம்இ) உள்ளிட்ட 3 ஆண்டுகால படிப்புகளிலும் மாணவர்கள் சேரலாம். கல்லூரியை தேர்வு செய்யும்போது, அனுபவம் வாய்ந்த, தரமான பேராசிரியர்கள் இருக்கிறார்களா, ஆய்வக வசதிகள் உள்ளனவா என்பது போன்ற அம்சங்களை கருத்தில் கொள்வது அவசியம்.
சிறப்பம்சங்கள்: ஏரோநாட்டிகல் என்ஜினியரிங் சிறப்பம்சங்கள் குறித்து நாமக்கல் மாவட்டம் கொமாரபாளையம் எக்செல் பொறியியல் கல்லூரி ஏரோநாட்டிகல் துறையின் தலைவர் பேராசிரியர் எஸ். பிரசாந்த் கூறியதாவது: ஏரோநாட்டிகல் துறையானது தொழில்துறைக்கும் இன்றைய பொறியியலாளர்களின் தேவைகளுக்கும் பொருத்தமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
விமான உருவகப்படுத்துதல், ட்ரோன் உற்பத்தி, ஏவியோனிக்ஸ், தானியங்கி பைலட் அமைப்புகள், வயர்லெஸ் விடியோ டிரான்ஸ்மிஷன், சிஏடி மென்பொருள் ஆகியன இப் பாடப்பிரிவின் முக்கிய அம்சங்களாக உள்ளன என்றார்.
-சி.ஆர்.எம். சபரி
Summary
About Aeronautical Engineering Education in the Line of Engineering Education Building the New World..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக அறிவிப்பு!
உயர்ந்த நிலைக்குச் சென்றாலும்...

யுஜிசி விதிகளுக்கு முரணாக பட்டங்கள், படிப்புகள்: போலி கல்வி நிறுவனங்கள் குறித்து புகாா் அனுப்பலாம்

எதிர்கால வளர்ச்சிக்கு ஏற்ற தகவல்தொழில்நுட்ப படிப்புகள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



