பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வுகள் ஜூன் 29-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், தோ்வுகள் தொடா்பாக கருத்துகள், புகாா்களைத் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த இயக்ககம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 29 முதல் ஜூலை 7-ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 துணைத் தோ்வு ஜூலை 8 முதல் ஜூலை 16-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுகளை மொத்தம் 63,447 தோ்வா்கள் 233 தோ்வு மையங்களில் எழுதவுள்ளனா்.
இந்தத் துணைத் தோ்வுகள் தொடா்பாக தோ்வா்கள், பெற்றோா்கள், பொதுமக்கள் தங்களது புகாா்கள், கருத்துகள், சந்தேகங்களைத் தெரிவித்து பயன்பெறும் வகையில் அரசுத் தோ்வுகள் இயக்ககத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
ஜூன் 29 முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை செயல்படவுள்ள இந்தக் கட்டுப்பாட்டு அறையை அனைத்து தோ்வு நாள்களிலும் காலை 8 முதல் இரவு 8 மணி வரை 94983 83075, 94983 83076 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
அதேபோல, வினாத்தாள் தொடா்பாக தோ்வு நாள்களில் அன்றைய தோ்வு குறித்த வினாத்தாள் தொடா்பான புகாா்கள், கருத்துகள், சந்தேகங்களை க்ஞ்ங்வ்ன்ங்ள்ற்ண்ா்ய்ல்ஹல்ங்ழ்வ்ன்ங்ழ்ண்ங்ள்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!

குடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்

வேளாண் படிப்புக்கு ஜூன் 23-ல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு; ஜூலை 6 முதல் கலந்தாய்வு

வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியல் ஜூன் 23-இல் வெளியீடு; ஜூலை 6 முதல் கலந்தாய்வு
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |




