இந்திய இறையாண்மைக்கு எதிராக பாகிஸ்தானிலிருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் நடத்தும் இதுபோன்ற தாக்குதல்கள் புதிதொன்றுமல்ல. ஜனநாயகம் குறித்தும், இறையாண்மை குறித்தும், பயங்கரவாதத்தைக் கடுமையாக எதிர்த்தும் கோஷமிடும் ஜனநாயக நாடுகள், அரசின் மறைமுக ஆதரவுடன் இன்னொரு ஜனநாயக நாட்டில் நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து மௌனம் காப்பது வியப்பாக இருக்கிறது. ஐஎஸ், அல்-காய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் மேலை நாடுகளில் தாக்குதல் நடத்தும்போது மட்டும்தான் அவை பயங்கரவாதச் செயல்கள் என்று அந்த நாடுகள் கருதுகின்றனவோ என்னவோ...