ஆயத்தமாகிறோம்!
மத்திய அரசு ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையின் மேம்பாட்டுக்காக ரூ.6,000 கோடியை ஒதுக்கி ஒரு சிறப்புத் திட்டத்தை அறிவித்திருக்கிறது. எப்போதோ செய்திருக்க வேண்டிய இந்த முயற்சியை ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதாவது விழித்துக்கொண்டு இந்திய அரசு செய்யத் துணிந்திருக்கிறதே என்பது மிகப்பெரிய ஆறுதல்.









