விருதும் விவாதமும்!
'பாரத ரத்னா' விருது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளிலேயே முதன்மையானது. தேசத்திற்கு அளப்பரிய தொண்டாற்றியவர்களுக்கும், உலக அரங்கில் இந்திய தேசத்திற்கு மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தித் தந்த சாதனையாளர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட வேண்டிய விருது அது.










