கொல்கத்தாவில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டி தொடங்கி பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை கிரிக்கெட்டுக்கும், ஓரளவு டென்னிஸ் போட்டிகளுக்கும் மட்டுமே ஆதரவு அளித்து வந்த இந்தியத் தொலைக்காட்சிகளும், வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களும் தங்கள் கவனத்தைக் கால்பந்திலும் திரும்பி இருப்பது ஆறுதல் அளிக்கும் மாற்றம்.
திரையுலகத் தாரகைகளும், கிரிக்கெட் நட்சத்திரங்களும் கால்பந்தில் கவனம் செலுத்த முற்பட்டிருப்பதும், சர்வதேசக் கண்ணோட்டமும், தொடர்பும் உள்ள இந்திய வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களும் தொலைக்காட்சி ஊடகங்களும் அவர்களுடன் கைகோத்திருப்பதும் வியாபார நோக்கம்தான் என்பதில் ஐயப்பாடு இருக்க வழியில்லை.
உலக அளவில் எடுத்துக் கொண்டால் இந்தியக் கால்பந்தாட்ட அணி 158-ஆவது இடத்தில்தான் இருக்கிறது. ஆசிய விளையாட்டுப் போட்டி அளவில் பார்த்தாலும் நாம் 30ஆவது இடத்தில்தான் இருக்கிறோம். கால்பந்தில் உலகக் கோப்பையை வெல்வது என்பது இன்றைய நிலையில் நிச்சயமாகப் பகல் கனவு. அதேநேரத்தில், இந்தியன் சூப்பர் லீக் பந்தயங்கள் வெற்றியும், வரவேற்பும் பெறுமேயானால், கால்பந்தாட்டத்தில் இந்திய வீரர்கள் முத்திரை பதிப்பது என்பது இயலாத ஒன்றல்ல.
கால்பந்தின் நிலைமை இப்படி என்றால், ஹாக்கியில் இந்திய அணி, பழம்பெருமையை மீட்டெடுக்கும் உற்சாகத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் தென் கொரியாவிலுள்ள இன்சியான் நகரத்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்திருக்கிறது இந்திய ஹாக்கி அணி.
நாம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இறுதி ஆட்டம் வரை விளையாடி வெற்றி பெற்று 16 ஆண்டுகளாகிவிட்டன. இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மோதி 32 ஆண்டுகளாகிவிட்டன. இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தானைத் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றிருப்பதால், 2016இல் ரியோ-டி-ஜெனிரோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் பந்தயங்களில் விளையாடும் தகுதியை இந்தியா பெற்றிருக்கிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிச்சுற்றில் நாம் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்திருந்தால், தேர்வுப் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுத்தான் ஒலிம்பிக்கில் விளையாடத் தேர்வாக முடியும். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தந்திருக்கும் உற்சாகம், நமது வீரர்கள் ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியாவின் வெற்றியை நிலைநாட்ட உதவக் கூடும்.
1928 ஆம்ஸ்டர்டாம், 1932 லாஸ் ஏஞ்சலீஸ், 1936 பெர்லின், 1948 லண்டன், 1952 ஹெல்சிங்கி, 1956 மெல்போர்ன் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து இந்தியா தங்கப் பதக்கத்தை வென்று வந்தது. 1960-இல் ரோமில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கத்தைத் தவறவிட்டு வெள்ளிப் பதக்கம் வென்றாலும்கூட, 1964-இல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் தங்கத்தை வென்று ஹாக்கியில் இந்தியாவின் புகழைத் தக்கவைத்துக் கொண்டோம்.
1964-க்குப் பிறகு, இந்திய ஹாக்கி அணி தனது பழைய வீரியத்தை இழந்தது. 1980ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில், தமிழகத்தைச் சேர்ந்த பாஸ்கரன் தலைமையிலான குழு மீண்டும் ஒருமுறை தங்கப் பதக்கத்தை வென்றது என்றாலும், இப்போது வரை அதுவே நாம் தங்கப் பதக்கம் வென்றெடுத்த கடைசி ஒலிம்பிக் போட்டியாகத் தொடர்கிறது. கடந்த 35 ஆண்டுகளாக ஹாக்கி விளையாட்டில் நாம் எழுச்சி காணவில்லை. கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக்கில்கூட இந்திய அணி 12ஆவதாகத்தான் வர முடிந்தது.
இப்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி பழைய உத்வேகத்துடன் உயிர்த்தெழுந்து தங்கப் பதக்கம் வென்றிருப்பதற்குக் காரணம், ஹாக்கி இந்தியா லீக் போட்டிகள் மூலம், ஹாக்கி விளையாட்டுக்குக் கிடைத்திருக்கும் விளம்பரமும், ஊக்குவிப்பும், சர்வதேச அளவிலான பயிற்சியும்தான்.
ஹாக்கி இந்தியா லீக் போட்டிகள் போல, கால்பந்தாட்டத்திற்கான இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளும் நமது விளையாட்டு வீரர்களுக்குப் புத்துணர்வையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி, சர்வதேச அளவில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தர வழிகோல வேண்டும். அதுமட்டுமல்லாமல், கிரிக்கெட்டிற்குக் கிடைக்கும் அதே அளவு வரவேற்பு ஹாக்கிக்கும், கால்பந்தாட்டத்திற்கும் இந்தியாவில் கிடைக்க இந்த லீக் போட்டிகள் உதவுமேயானால், அதற்குப் பின்னால் இருக்கும் வியாபார நோக்கத்தைப் பொருள்படுத்த வேண்டியதில்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இதுதான் புரமோஷனா? புலம்பும் தனுஷ் ரசிகர்கள்!
ஹூக்ளி நதியில் பிரதமர் மோடி படகுப் பயணம்

ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!

5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

