கூட்டணியா, மாற்று அணியா?
காங்கிரஸூடன் கைகோத்துக் கொள்ள மனமில்லாமலும், பாரதிய ஜனதாக் கட்சியுடன் உறவு வைத்துக்கொள்ள இயலாமலும் இருக்கும் இடதுசாரிக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் அடுத்த பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளின் ஆரம்பமாக தில்லியில் மதவாதத்திற்கு எதிரான மாநாட்டைக் கூட்டின.










