திரைப்படங்களை தன்னுடைய கலைரசனைக்கு ஏற்ப எடுத்து அதனை பட்டித்தொட்டி எங்கும் ஓடச் சென்ற கலைஞன், இயக்குநர் இமயம் பாரதிராஜா இதுவரை 46 படங்களை இயக்கியிருக்கிறார்.
விருதுகளுக்கு பாராட்டுகளும் அவரது கலைத் திறமையை கௌரவிக்க முடியாது, வேண்டுமானால் அவருக்கு அளிக்கப்படுவதால் விருதுகளும் பாராட்டுகளும் வேண்டுமானால் கௌரவிக்கப்படலாம் என்பதே அவரது திரைப்படங்களை உணர்வுப்பூர்வமாக பார்த்து ரசித்து அதனுடன் வாழ்ந்த ரசிகர்களின் உள்மனக் கருத்தாக இருக்கும்.
அந்த வகையில், தனக்கு வழங்கப்பட்ட, மத்திய அரசால் வழங்கப்படும் மிக முக்கிய விருதுகளில் ஒன்றாக பத்ம ஸ்ரீ விருதினையே பாரதிராஜா திருப்பி வழங்கியிருக்கிறார். இலங்கையில், தமிழீழ மக்கள் மீது நடத்தப்பட்ட போரின்போது, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்தததைக் கண்டித்து, திரையுலகினர் போராட்டத்தை முன்னெடுத்தனர். அந்தப்போராட்டத்தின் நிறைவில், தனக்கு 2004ஆம் ஆண்டு மத்திய அரசு வழங்கிய பத்ம ஸ்ரீ விருதினை பாரதிராஜா திருப்பி அளித்தார்.
விருதுகளையும் பாராட்டுகளையும் பெரிதாகக் கருதாத, மக்களின் கைத்தட்டுகளுக்காகவும் பாராட்டுகளுக்காகவும் மட்டுமே படம் எடுத்தவர் பாரதிராஜா என்பதை நிரூபித்துக் காட்டினார்.
அது மட்டுமல்ல, 16 வயதினிலே படம் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எழுந்தபோது, என் மன நிறைவுடன் படம் எடுத்தேன். ஓடவில்லை என்றாலும் பரவாயில்லை என சமாதானம் செய்துகொண்டாராம் பாரதிராஜா, ஆனால், அப்படியொன்றும் தோல்வியடையவில்லை. மாஸ் வெற்றிப்படமாக அமைந்திருந்தது.
மேலும், பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படங்களின் பட்டியல் கடைசி படத்திலிருந்து முதல் படம் என்ற போக்கில் இவ்வாறு விரிகிறது.
1. மாடர்ன் லவ் சென்னை - 2023
2. மீண்டும் ஒரு மரியாதை - 2020
3. குற்றப் பரம்பரை - 2016
4. அன்னக்கொடி - 2013
5. தெக்கத்தி பொண்ணு - 2008
6. பொம்மலாட்டம் - 2008
7. கண்களால் கைது செய் - 2004
8. ஈர நிலம் - 2003
9. கடல் பூக்கள் - 2001
10. தாஜ்மஹால் - 1999
11. அந்திமந்தாரை - 1996
12. பசும்பொன் - 1995
13. கருத்தம்மா - 1994
14.கிழக்குச் சீமையிலே - 1993
15. கேப்டன் மகள் - 1992
16. நாடோடி தென்றல் - 1992
17. கருட த்வஜா - 1991
18. புது நெல்லு புது நாத்து - 1991
19. என் உயிர்த் தோழன் - 1990
20. ஜமதக்னி - 1988
21. கொடிபறக்குது - 1988
22. வேதம் புதிது - 1987
23. ஆராதனா - 1987
24. காடலோரக் கவிதைகள் - 1986
25. சவேரே வாலி காடி - 1986
26. ஈ தாரம் இல்லு - 1985
27. முதல் மரியாதை - 1985
28. யுவதாரம் பிலிசிந்தி - 1985
29. ஒரு கைதியின் டைரி - 1985
30. புதுமைப் பெண் - 1983
31. மண் வாசனை - 1983
32. காதலர்கள் - 1983
33. வாலிபமே வா வா - 1982
34. காதல் ஓவியம் - 1982
35. அலைகள் ஓய்வதில்லை- 1981
36. சீதகோக சிலகா - 1981
37. டிக் டிக் டிக் - 1981
38. கோத்தா ஜீவிதலு - 1980
39. நிழல்கள் - 1980
40. சிவப்பு ரோஜா - 1980
41. நிறம் மாறாத பூக்கள் - 1979
42. புதிய வாழ்த்துகள் - 1979
43. சொல்வா சவான் - 1979
44. கிழக்கே போகும் ரயில் - 1978
45. சிகப்பு ரோஜாக்கள் - 1978
46. பதினாறு வயதினிலே - 1977
என பாரதிராஜா 46 படங்களை இதுவரை இயக்கியிருக்கிறார். இதில் ஒரு சில படங்களைத் தவிர மற்ற அனைத்தும் மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவை. இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் இமயம்தான் என நிரூபித்தவர். இவர் இதுவரை 25 படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.
Summary
Details regarding the 46 films directed by Bharathiraja and the return of his Padma Shri award...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










