தமிழுக்காகவும், தமிழகத்துக்காகவும் கருணாநிதியும் திமுகவும் ஆற்றிய தொண்டுகள் ஏராளம்.
1965 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீக்குளித்தவர்கள், காவலர்களின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களிலும் பெரும்பாலானோர் திமுகவினர்.
*அண்ணா வழியில் கருணாநிதியும் தமிழ்ப் பயிற்றுமொழிக் கொள்கையில் உறுதியானவர். தமிழில் பயிலும் மாணவர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கவும் அவர் ஆணை பிறப்பித்தார். 1996 ஆம் ஆண்டு கருணாநிதி மீண்டும் முதலமைச்சரானபோது, மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் தமிழைப் பாடமொழியாக்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.
*அனைத்துப் பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்புவரை தமிழை ஒரு பாடமாகக் கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும் என்று சட்டத்தையும் நிறைவேற்றினார்.
*2010-11 ஆம் ஆண்டு அண்ணா தொழிற்நுட்ப பல்கலைக் கழகங்களில் கட்டுமானவியல், இயந்திரவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் தமிழ்மொழி வழியாகக் கல்வி கற்க வகைச் செய்து, இந்தியாவிலேயே முதன்முறையாகத் தாய்மொழியில் கற்க ஆணையிடப்பட்டது. தமிழகத்தில் இன்றுஅனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப்படுவதற்குக் கருணாநிதியே காரணம்.
*தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள் அனைத்திலும் பிற மாநில மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் தமிழை ஒரு பாடமாகப் படித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இனி, தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காமல் பட்டம் பெறும் பேச்சுக்கே இடமில்லை. இதை நிறைவேற்றியவர் கருணாநிதி.
*திருக்குறளை திருமண அழைப்பிதழ் முதல் அரசுப் பேருந்துகள், அலுவலங்கள் என அனைத்து இடங்களிலும், ஒவ்வொரு தமிழரின் உள்ளங்களிலும் கொண்டு சேர்த்ததில் கருணாநிதிக்கு முக்கிய பங்குண்டு.
*கருணாநிதி கவிதைகள் இயற்றியதுடன், கவியரங்கங்களுக்கும் தலைமை தாங்கி நடத்தியுள்ளார். அறிஞர் அண்ணா மறைந்தபோது, “பூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்-அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம்” எனத் தொடங்கும் கலைஞர் பாடிய இரங்கற்பா, தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது.
*தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளித்து ஆணை பிறப்பித்தார்.
*வழக்குமன்ற மொழியாகத் தமிழ்மொழியே இருக்கவேண்டும் என்பதுதான் அண்ணாவின் கொள்கை. இதை செயல்படுத்தியவர் கருணாநிதி.
* தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 விழுக்காடு இடங்கள் ஒதுக்க உத்தரவிட்டவர் கருணாநிதி.
*அண்ணா வழியில், கருணாநிதியும் தமிழை நடுவண் அரசின் ஆட்சி மொழியாக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தினார்.
*தமிழைச் செம்மொழியாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அறிவிப்பு. இதற்கு முழு முயற்சி எடுத்தவர் கருணாநிதி.
*தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறைக்காக ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கியவர்.
*1974 ஆம் ஆண்டு அன்றைய கழக அரசில் “செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தை நிறுவினார்.
*சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக அஞ்சல் வழியில் தமிழ்க் கல்வியை நிறுவி, வெளிநாடுகளிலும் கல்வி மையங்களை ஏற்படுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அதிக வாக்குப்பதிவு! மக்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இபிஎஸ் நன்றி!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு

தமிழகத்தில் மயோனைஸுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!

மீண்டும் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகம்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


