தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பேருந்து நிலையங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என சட்டம் இருக்கிறது.. தெரியுமா?

அசுத்தத்தின் மொத்த வடிவங்களும் இருப்பது தமிழகத்தின் அனைத்து பேருந்து நிலையங்கள் தான். வெற்றிலை பாக்கு, எச்சில்,  சிகரெட் புகை, பாட்டுச் சத்தம்,

News image

பேருந்து நிலையங்கள்

Updated On :22 அக்டோபர் 2019, 11:10 am

அசுத்தத்தின் மொத்த வடிவங்களும் இருப்பது தமிழகத்தின் அனைத்து பேருந்து நிலையங்கள் தான். வெற்றிலை பாக்கு, எச்சில்,  சிகரெட் புகை, பாட்டுச் சத்தம், பிளாஸ்டிக் குப்பைகள், பூக்குப்பைகள், மழைநீர் தேக்கம், சிறுநீர் நாற்றம், பேருந்திலிருந்து தின்றுவிட்டுப் போடும் கழிவுகள் என பொதுக்குப்பை கூளமாகவே நாம் பேருந்து நிலையங்களை வைத்திருக்கிறோம்.

சாலைகளுக்கு பல்லாயிரம் கோடிகள் ஒதுக்கும் அரசு சுத்தத்திற்கு கவனம் செலுத்துவதில்லை என்பது உண்மையே.

தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யக் கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர்கள், துறை சார்ந்தவர்களிடம் பதில் பெற்று ஒருவாரத்தில் பதில் அறிக்கை தாக்கல் செய்வதாக வருவாய் நிர்வாகத் துறை முதன்மைச் செயலாளர் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

சேலம் மாவட்டம், கண்ணங்குறிச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் பேருந்து நிலையங்கள் பராமரிக்கப்படுவதில்லை என்று பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அவரது பொது நல மனுவில், “தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள், சுகாதாரக் கேடுடன் இருக்கிறது. பேருந்து நிலையங்களை ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுவதால்தான் இந்த சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.

இந்திய அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவு, வாழ்வுரிமையை வழங்கியுள்ளது. அதில் சுகாதாரமான சூழ்நிலையை அனுபவிப்பதும் அடங்கும். மாநிலம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களை சுத்தமாகப் பராமரிக்க வலியுறுத்தி அதிகாரிகளுக்கு 2015-ல் மனு அளித்தும், எந்த பதிலும் இல்லை.

தெருக்களையும், பொது இடங்களையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவுகளை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்கும்படி, தமிழக வருவாய்த் துறை, உள்துறை, போக்குவரத்துத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத் துறை செயலாளர்களுக்கும் டிஜிபிக்கும் உத்தரவிட்டிருந்தது.

மீண்டும் இந்த வழக்கு இன்று நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக வருவாய் நிர்வாகத் துறை முதன்மைச் செயலாளர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் ஒவ்வொரு துறை சார்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் நடவடிக்கை குறித்தும் விரிவான அறிக்கையை ஒரு வார காலத்திற்குள் அளிக்கும்படி வலியுறுத்தியதாக முதன்மைச் செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிக்கையைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.