சிறப்பு அம்சங்கள்
* ஹாங்கி எல் 5 ரக காரில் உள்ள பல்வேறு சிறப்பு அம்சங்கள் அதிபருக்கு மட்டுமே உருவாக்கப்பட்டதால், பல விஷயங்களை அந்த நிறுவனம் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியிடவில்லை.
* 'ஹாங்கிஎல் 5' ரக காரில் 408 குதிரைத்திறன் இன்ஜின், 12 வால்வுகளைக் கொண்டது, 6 ஸ்பீட் கியர்பாக்ஸ், அனைத்து சக்கரங்களையும் அதிவேகமாகச் சுற்றவைக்கும் வகையில் கியர் பாக்ஸில் இருந்து சக்தி சக்கரங்களுக்கு செலுத்தும் வசதி.
* 10 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தை அடையும் திறன் படைத்த 12 வால்வுகளைக் கொண்ட இன்ஜின்.
* 105 லிட்டர் பெட்ரோல் அல்லது கேஸ் நிரப்பிக்கொள்ளும் வசதி உள்ளது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 500 மைல்கள் வரை பயணிக்க முடியும்.
* காரின் உட்புறம் ரோஸ் உட் பேனல்களால் அலங்கரிக்கப்பட்டு, கிரீம் நிறத்திலான தோலில் செய்யப்பட்ட இருக்கைகளைக் கொண்டது.
* அதிக வேகத்தில் செயல்படும் ஏசி, செயற்கைக்கோள் தொலைபேசி வசதி இருக்கிறது.
* சாலையில் கார் செல்லும் போது எந்த நாட்டுத் தலைவருடன் தடையின்றி தெளிவாகப் பேசும் வகையில் தொலைத் தொடர்புக் கருவிகள் இருக்கின்றன
* நான்கு கதவுகளும் குண்டு துளைக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிய ரக ஏவுகணைகள் மூலம் தாக்கினாலும் கார் எந்தவிதமான சேதமும் ஏற்படாத வகையில் காரின் சேஸ், 'உருவம்', வடிவமைக்கப்பட்டுள்ளது.
* காரின் எந்தக் கண்ணாடியையும் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்க முடியாத அளவுக்கு வலிமையான கண்ணாடியாகும்.
* காரின் ஓரத்தில் ஹாங்கியின் சிவப்புக் கொடி சின்னம் வைக்கப்பட்டு இருப்பதுதான் காரின் சிறப்பு அம்சம்.
* காரின் பின்புறத்தில் உள்ள ஒளிரும் விளக்குகள் சீனாவின் பாரம்பரிய 'லான்டர்ன்' விளக்குபோல் இருக்கும். காகிதத்தால் வடிவமைக்கப்படும் 'லான்ட்ரன் விளக்குகள்' சீனாவின் பண்டிகை காலத்தில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் உணர்த்தும் விளக்குகளாகும். அதை காரில் அடையாளமாக அதிபர் பயன்படுத்துகிறார்.
* காரின் பக்கவாட்டில் 'ஹாங்கி' என்ற எழுத்து பொறிக்கப்பட்டு இருக்கும். இந்த 'ஹாங்கி' என்ற எழுத்து சீனாவின் 'மாவோ'வின் கையெழுத்துபோன்று எழுதப்பட்டு இருக்கும்.
* ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி முல்சானே, மெர்சடிஸ் என பல்வேறு அதிசொகுசுக் கார்கள் இருந்தாலும், ஹாங்கி எல்5 அனைத்திலும் பிரத்யேகமானது என்று கார் தயாரிக்கும் எப்ஏடபிள்யு நிறுவனம் தெரிவித்துள்ளது.