கடந்த ஒரு வாரகாலமாகவே இணையத்தில் பொங்கிப் பிரவகித்து சதா கொதித்துக் கொண்டிருக்கிறது பொள்ளாச்சி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கெதிரான கண்டனங்கள். #arrestpollachirapists எனும் டிவிட்டர் ஹேஸ்டேக்கில் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வரும் இவ்வேளையில் நாம் நிச்சயம் யோசிக்கத்தான் வேண்டும். இத்தனைக்கும் காரணம் அந்த ரேப்பிஸ்ட்டுகள் மட்டும் தானா? அவர்களுக்கு அத்தகைய கேடு கெட்ட சுதந்திரத்தையும், அராஜகம் இழைக்கும் தைரியத்தையும் தந்தது யார்? பணபலமும், அதிகாரத் திமிரும் தானே? அதை ஒடுக்க இந்த சமூகமும் நம்மை ஆளும் அரசாங்கமும் என்ன செய்யவிருக்கிறது? வேலியே பயிரை மேய்ந்து கொண்டிருக்கும் அவலத்தில் இந்தக் கேள்வி அனாவசியமானதே!