ப்ளூவேல் எனப்படும் நீலத் திமிங்கல ஆன்லைன் விளையாட்டில் இருந்து மீள்வதற்குள் அடுத்து மோமோ என்ற விளையாட்டு பூதாகரமாக அவதாரம் எடுத்துள்ளது.
மோமோ விளையாட்டால் மேற்கு வங்க மாநிலத்தில் 2 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்போனுக்கு மோமோவிடம் இருந்து அழைப்பு வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம் என்றும் உடனடியாக காவல்துறைக்குத் தெரியப்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பிள்ளைகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோமோ என்ற பெயருடன் வரும் லிங்க் அல்லது புகைப்படம் அல்லது விடியோ என ஏதேனும ஒன்றை செல்போனில் டவுன்லோடு செய்தாலும் உடனடியாக அந்த செல்போனில் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் மோமோ தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு செல்போனுக்கு சொந்தக்காரரை மிரட்ட ஆரம்பிக்கும்.
இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்..
வாட்ஸ்அப், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக இந்த மோமோ விளையாட்டு பரவுகிறது.
செல்போனில் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் தன் கைவசம் எடுத்துக் கொள்ளும் மோமோ, அவர்களை மிரட்டி தற்கொலைக்குத் தூண்டுகிறது.
இது யாரை, எப்படித் தேர்வு செய்கிறது என்று பார்த்தால், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்களது விரக்தி, ஏமாற்றம் போன்ற வாசகங்களை பதிவு செய்யும் நபர்களின் எண்களைத் தேடிப்பிடித்து வாட்ஸ் அப்பில் லிங்க் அனுப்புகிறது.

மோமோ என்று வரும் செல்போன் எண்களை எந்த நாட்டில் இருந்து யார் இயக்குகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பெரும்பாலான எண்கள் மெக்சிகோ, கொலம்பியா, ஜப்பான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவையாக உள்ளன.
வைரஸ் மூலம் செல்போனை மோமோ கட்டுப்பாட்டில் எடுத்ததும், அதன் கேமரா, மைக்ரோ ஃபோன் போன்றவற்றை தன்னிச்சையாகவே இயக்கி செல்போனை வைத்திருப்பவருக்குத் தெரியாமலேயே தகவல்களை சேகரிப்பதும், பேசுவதை பதிவு செய்வதும் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது.
இறுதியாக ஒரு சவாலைக் கொடுத்து அதை செய் அல்லது சில தகவல்களை சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டுவதால், மோமோ விளையாடும் நபர் இறுதியாக தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
மோமோ ஆன்லைன் விளையாட்டு ஜப்பானிய மொழியில் எழுதப்பட்ட பல்லட் ஆஃப் ஷினிகாமி என்ற நவாலில் வரும் கதாப்பாத்திரமாகும். இதற்கு மரணத்தின் பெண் கடவுள் என்று அர்த்தம். அந்த நாவலில் வரும் கதாப்பாத்திரத்தைப் போலவே மோமோவும் மரணத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது.
மிடோரி என்பவர் பெண், பறவை ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரு வரைபடத்தை வரைந்துள்ளார். அதைத்தான் மோமோ பயன்படுத்தி வருகிறது. ஆனால் அந்த விளையாட்டுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகிறார் மிடோரி.
மோமோ விளையாட்டில் ஈடுபட்டு முதல் தற்கொலைச் சம்பவம் அர்ஜென்டினாவில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
வீடியோக்கள்
Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore
தினமணி வீடியோ செய்தி...

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

