பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

திருமண வரன் தேடும் இணையதளத்தில் பதிவு செய்திருப்போர் கவனத்துக்கு..

வழிப்பறி, கொலை, கொள்ளை என நாள்தோறும் திருடர்கள் புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர். எவ்வளவுதான் விழிப்போடு இருந்தாலும் ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

News image
Updated On :25 அக்டோபர் 2018, 10:12 am

சென்னை: வழிப்பறி, கொலை, கொள்ளை என நாள்தோறும் திருடர்கள் புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர். எவ்வளவுதான் விழிப்போடு இருந்தாலும் ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதையெல்லாம் எதற்கு சம்பந்தமே இல்லாமல் திருமண வரன் தேடும் இணையதளத்தில் பதிவு செய்திருப்போருக்கு சொல்கிறோம் என்று நீங்கள் புருவத்தை உயர்த்தலாம்.

விஷயம் இருக்கிறது, சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞரை, திருமண வரன் தேடும் இணையதளத்தின் மூலம் தொடர்பு கொள்வதாகக் கூறி பேசிய பெண், தனது குடும்பத்தார் இளைஞரைப் பார்க்க விரும்புவதாகக் கூறி அழைத்து, அவரிடம் இருந்த செல்போன், ஏடிஎம் அட்டை, தங்க நகைகளைக் கொள்ளையடித்துள்ளார்.

அதாவது, காளிசரண் (42) என்பவர் திருமண வரன் தேடும் இணையதளத்தில் தனது தகவல்களைப் பதிவு செய்துள்ளார். ஒரு பெண் காளிசரணை தொடர்பு கொண்டு தனது குடும்பத்தார் காளிசரணை நேரில் பார்க்க விரும்புவதாகக் கூறி ஒரு முகவரியைக் கொடுத்து அங்கு வருமாறுக் கூறியுள்ளார்.

அந்த முகவரி ஒரு சர்வீஸ் அப்பார்ட்மென்ட். அங்கு காளிசரண் சென்ற போது ஒரு பெண்ணும், 43 ஆண்களும் இருந்துள்ளனர். அவர்கள் அப்பெண்ணின் உறவினர்கள் என முதலில் காளிசரண் நினைத்துள்ளார். பிறகுதான், அவர்கள் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்து கொண்டார். கத்தி முனையில் காளிசரணிடம் இருந்து பணம், நகை, ஏடிஎம் அட்டையைப் பிடுங்கிக் கொண்டனர். மிரட்டி ஏடிஎம்-மின் பின் எண்ணையும் வாங்கியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.