பிறகு ஆண்களைப் போல ஷேவிங் செய்து கொள்வது, முக ரோமங்களை அகற்ற அதற்கென விளம்பரப்படுத்தப் படும் அத்தனை கிரீம்களையும் பயன்படுத்துவது என்றெல்லாம் செய்து பார்த்தேன். இதற்கிடையில் என்னுள் நிகழ்ந்த இந்த மாற்றங்களை கவனித்த மக்கள், நான் தெருவில் செல்லும் போதும், அவர்களைக் கடக்கும் போதும் ‘ஏய்... தாடி வைத்த பெண்ணே என்றும் Beardo instead of Wierdo, Sheman, Shemale என்றும் கிண்டல் செய்யத் தொடங்கினர். இன்னும் சிலரிடமிருந்து மரண அச்சுறுத்தல்களைக் கூடத் தான் எதிர்கொண்டதாகக் கூறுகிறார் ஹர்னாம். தனக்கு நேர்ந்த இந்த வித்யாசமான அசாதாரண ரோம வளர்ச்சியை ‘தாடி, மீசையுடனான பெண்’ என்ற தலைப்பில் காணொளியாக்கி யூ டியூபில் பதிவேற்றம் செய்ய அதைக் கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் ஒரு சிலரிடமிருந்து வந்தவையே அந்த மரண அச்சுறுத்தல்கள்.