1960 ல் கொண்டு வரப்பட்ட விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு தற்போது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 2017 என புதிய சட்டத்தை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் படி நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யப்படுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது அதுமட்டுமல்ல மாட்டுச் சந்தைகளில் மாடுகள் விற்பனை செய்யப்படுவதில் உள்ள முறைகேடுகளை ஒழுங்குபடுத்தவும் சில சட்ட விதிகள் தற்போது உருவாக்கப் பட்டு புதிதாக விலங்குகள் வதை தடை சட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. திருத்தப் பட்ட புதிய விலங்கு வதை சட்டத்தின் சில சாராம்சங்கள்;
- பிறந்து 6 மாதங்களுக்குக் குறைவான கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக் கூடாது. அதே போல வயதான மாடுகளையும் அடிமாடுகளாக விற்பனை செய்யக் கூடாது.
- மத விழாக்களில் மாடு, ஒட்டகம் முதலிய விலங்குகளை வெட்டிப் பலி கொடுக்கக் கூடாது.
- கால்நடைகளின் கொம்புகளை சீவக் கூடாது, கொம்புகளில் வர்ணம் தீட்டக் கூடாது.
- கால்நடைகளைப் பாரம் சுமக்கப் பயன்படுத்தக் கூடாது.
- எந்த விலங்குகளுக்கும் அணிகலன்கள் முதலியவற்றை அணிவிக்கக் கூடாது.
- கால்நடை மருத்துவர்கள் தவிர வேறு யாரும் கால்நடைகளுக்கு மருந்துகள் அளிக்கக் கூடாது.
- கால்நடை சந்தைகளில் விலங்குகள் விவசாயக் காரியங்களுக்காக மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன என ஆதாரபூர்வமாக எழுதி சமர்பிக்க வேண்டும்.
- கால்நடையின் உரிமையாளரோ அல்லது அவருடைய அதிகாரப்பூர்வமான முகவரோ கையொப்பமிட்ட எழுத்து வடிவிலான ஒப்பந்த ஆவணம் இல்லாமல் கால்நடைகளை சந்தைக்கு கொண்டுவரக் கூடாது.
- கால்நடைகளின் அடையாளம் குறித்த விவரங்கள் சமர்பிக்கப் பட வேண்டும். அதே சமயம் கால்நடைகளின் உடலில் அடையாளங்கள் பொறிக்கப் பட்டிருக்க கூடாது.
இத்தகைய சரத்துகளை அடிப்படையாகக் கொண்டு புதிய விலங்குகள் வதை தடைச் சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்திருக்கிறது.
நாடு முழுவதும் மாட்டிறைச்சி உண்போரிடையே மிகுந்த அதிர்வலைகளை எழுப்பியுள்ள இந்த தடைச் சட்டம் குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர். அவற்றுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசின் இந்தப் புதிய சட்டத்தால் நாட்டில் இயற்கை விவசாயம் காக்கப் படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரான ஹர்ஷ வர்த்தன் வெளியிட்ட அறிக்கையில்; மாடுகள் அடிமாடுகளாக விற்பனை செய்யப் படுவதில் இருக்கும் முறைகேடுகளைத் தடுக்கவே இப்படி ஒரு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விதிகள் கால்நடைச் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கூடங்களுக்கு மட்டுமே பொருத்தமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் மாட்டிறைச்சி உண்போரை அதிக எண்ணிக்கையில் கொண்ட இந்திய மாநிலங்கள் அனைத்திலும் இந்த புதிய சட்டத் திருத்தமானது மாட்டிறைச்சி உண்போரின் உரிமையைப் பறிக்க வந்த சட்டமாகவே கருதப் படுகிறது. ‘இன்று மாட்டிறைச்சி உண்ணக் கூடாது என்று தடைச் சட்டம் போடக் கூடியவர்கள் நாளையே மீன் உண்ணக் கூடாது என்பார்கள்’ என்று இவ்விசயத்தில் தனது கோபத்தையும் பதிவு செய்திருக்கிறார் கேரள முதல்வர். மத்திய அரசு தனது மக்களின் உணவுண்ணும் சுதந்திரத்தையே ஆட்டம் காண வைக்கும் அளவுக்கு இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தது எத்தனை தூரம் செல்லுபடியாகப் போகிறது என்பதற்கு வருங்காலமே சாட்சி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


