இத்தனை அருமையான நட்புடன் ஒரு மாமனார், மருமகனை நாம் இது வரை கண்டிருக்க முடியாது. உறவுகளில் மிக மிகச் சிக்கலான உறவென்றால் அது மாமனார், மருமகன் உறவு தான். மிக, மிகப் ப்ரியமாக வளர்த்த தனது மகளை அன்பாலும், உரிமையாலும் தம்மிடமிருந்து பிரித்து ஆதிக்கம் செலுத்த வந்திருக்கும் புது உறவான மருமகன்களிடம் பெரும்பாலான மாமனார்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியுடன் தான் பழகுவார்கள். அந்நியோன்யமான மாமனார், மருமகன் உறவென்பது எங்கேயோ அத்திப் பூத்தார் போல எப்போதாவது நிகழ்வதுண்டு. அதுவே அந்நியோன்யமான மாமியார், மருமகள் உறவென்றால் நம்மிடையே நிறைய உதாரணங்களை கண்கூடாகப் பார்க்க முடியும். ஆனால் மாமனார், மருமகன் அந்நியோன்யம் என்பது அப்படிப் பட்டதல்ல. அதனால் தான் இந்த மாமனாரும், மருமகனும் நமது கவனத்தை ஈர்க்கிறார்கள்.