i) ஒவ்வொரு கிராம ஊராட்சியில் வாழும் ஏழை மக்களிலிருந்து பயனாளிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவை கிராம சபையில் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு பயனாளிகள் தெரிவு செய்யப்படும் போது தமிழ்நாடு வாழ்வாதார திட்டம் மற்றும் புது வாழ்வு திட்டத்தின் கீழ் நலிவுற்றவர்கள் என்று தெரிவு செய்யப்பட்ட பட்டியலில் (PIP) இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
ii) ஒராண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்தம் 20,000 வீடுகளில் 29 விழுக்காடு அதாவது 5,800 வீடுகள், ஆதி திராவிடர்களுக்கும், 1 விழுக்காடு அதாவது 200 வீடுகள், பழங்குடியினர்களுக்கும், மீதமுள்ள 70 விழுக்காடு அதாவது 14,000 வீடுகள் இதர இனங்களில் (ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாதோர்) வழங்கப்படவேண்டும்.
iii) மாவட்ட வாரியான ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு மாற்று திறனாளிகளுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
iv) பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்படும் போது, மாற்றுத் திறனாளிகள், விதவைகள், ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பெண்களைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் ஒய்வு பெற்ற முன்னாள் துணை இராணுவ படையினர், ஊரகப் பகுதிகளில் வாழும் ஊட்டச்சத்து குறைவினால் பாதிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத் துறையால் (CDS) அடையாளம் காணப்பட்ட குழந்தைகளை கொண்ட குடும்பங்கள், திருநங்கைகள், துணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) அவர்களால் சான்றிதழ் வழங்கப்பட்ட ஹெச்ஐவி/எய்ட்ஸ்/காசநோய் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீ விபத்து, வெள்ளம் போன்ற இதர பிற இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். மேலும், மனநலம் குன்றியோர் உள்ள குடும்பங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.