/

செவ்வாய் கிரகத்தில் வேற்று கிரகவாசிகளா?

சூரிய குடும்பத்தின் நான்காவது கோளான செவ்வாய் கிரகத்தைப் பற்றிய 

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:55 pm

IANS

சூரிய குடும்பத்தின் நான்காவது கோளான செவ்வாய் கிரகத்தைப் பற்றிய சமீபத்திய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் மூன்று பெரிய கோபுரங்கள் தென்பட்டதாக ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர். இவை முறையே 4.8 கிமீ உயரமுடையதாகவும், ஒரே நேர்க்கோட்டில் உள்ளதென தெரிவித்தனர். மண்டொடெஸ்கொநோசிடோ (Mundodesconocido) எனும் யூ ட்யூப் சானலில் அதன் புகைப்படத்தை வெளியிட்டு மார்ஸ் கிரகத்தைப் பற்றி பரபரப்பான தகவல்களையும் அவர்கள் பதிவேற்றி உள்ளனர். இந்த கோபுரத்தை கட்டியவர்கள் நிச்சயம் செவ்வாய் கிரகத்தைச் சேர்ந்த அதி புத்திசாலியான வேற்று கிரவாசிகளாகத்தான் இருக்க முடியும். புகைப்படம் எடுத்து சோதித்ததில் அம்மூன்று கோபுரங்ளும் ஒரே வடிவத்தில் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். யாரும் வசிக்காத  கிரகத்தில் எப்படி அக்கட்டடங்கள் திடீரென்று தாமாக எழும்பியிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர் ஆய்வாளர்கள். தவிர அந்தக் கோபுரங்களை உற்று நோக்கினால் அவை காற்று அல்லது தண்ணீல் உருவானவை போலத் தோன்றவில்லை. நிச்சயம் அதி நவீன தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி அக்கிரகத்தில் வசிக்கும் ஏலியன்கள் கட்டியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள்அனுமானிக்கின்றனர். இந்த கோபுரங்களின் வரைபடத்தை  3டியில் உருவாக்கி செவ்வாய் கிரகத்தைப் பற்றியும், அதில் ஏலியன்கள் வாழ்கிறார்களா என்பதைப் பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டு ஆச்சரியப்படும் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.  

Story image

ஆனால் நாசா விஞ்ஞானிகள் இதனை மறுத்துள்ளனர். இந்த மூன்று கோபுரங்களும் நிச்சயம் தற்போது இந்தப் படங்களில் பார்ப்பது போல் இருக்காது, நிறைய வித்தியாசங்கள் காணப்படும். உண்மையில் அது மற்றவர்கள் கூறுவது போல் வேற்றுகிரகவாசிகள் எழுப்பியதாக இருக்க முடியாது. அப்படி நம்பினால் நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சும். மேலும் பூமியிலிருந்து பார்க்கும் போது கோபுரங்களாகத் தென்பட்டாலும் முறையான ஆய்விற்குப் பிறகே அவற்றின் முழு விபரங்களை தெரிந்து கொள்ள முடியும். தவிர இதற்கு முன்னர் செய்வாய்கிரகத்தில் மனிதர்கள் உள்ளனர், அவர்கள் முகங்கள் தெரிந்தன என்பன போன்ற ஆய்வுகள் வெளிவந்தன. ஆனால் அவை எதுவும் உண்மையில் மனித முகங்கள் அல்ல என்று முடிவுகள் வெளியாகின. எனவே இந்த மூன்று கோபுரங்கள் பற்றி தெளிவாக ஆராய்ந்த பின்னரே அவை என்னவென்றும் வேற்றுகிரகவாசிகள் உண்மையில் உள்ளனரா என்பதையும் கூற முடியும் என்றனர் நாசா விஞ்ஞானிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.