கனடாவில் ‘இயல் விருது’ பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்!
டொரண்டோ: ஜூன் 13 ம் தேதி டொரண்டோவில் ஹோட்டல் ராடிஸனில் நிகழ்ந்த ஒரு விழாவில் அந்த ஹோட்டலே களை கட்டியது. வருடம்தோறும் தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த படைப்புக்களை தேர்ந்தெடுத்து


டொரண்டோ: ஜூன் 13 ம் தேதி டொரண்டோவில் ஹோட்டல் ராடிஸனில் நிகழ்ந்த ஒரு விழாவில் அந்த ஹோட்டலே களை கட்டியது. வருடம்தோறும் தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த படைப்புக்களை தேர்ந்தெடுத்து ‘இயல் விருது’ வழங்கிவருகிறது. கனடாவில் தமிழர்களுக்காக இயங்கிவரும் தமிழ் இலக்கிய தோட்டத்தின் பதினைந்தாவது இயல் விருது வழங்கும் விழாவில் தமிழ் எழுத்தாளர்களுடன் கனடா எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனருமான டேவிட் பெஸ்மோஸ்கிஸ் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.
ஒவ்வொரு விருதுக்கும் சில நிமிட அறிமுகமும், அதைத் தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்வு, மூன்று நிமிடம் தாண்டாத ஏற்புரை என விழா நேர ஒழுங்கோடு நடைபெற்றது. வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டது. ஜெயமோகன் தமிழின் முக்கிய எழுத்தாளர் மட்டுமல்ல விமர்சகர், திரைத்துறையில் வசனகர்த்தா என்று பன்முகச் சிறப்புடையவர். விழாவில் ஜெயமோகன் பேசியபோது தன் வாழ்வில் நடந்து சில சம்பவங்களையும் அது தன்னை பாதித்தவிதமும், பெற்றோரின் மரணம், தான் எழுத்தாளனாக மாறிய சூழல் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டார். வாழ்க்கையில் ஒரு கணத்தைக்கூட வீணாக்காமல் வாழும் விதம் பற்றிய அவரது சிறப்புரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
அதன் பின் மற்ற சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருதை ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ நூலுக்காக கதிர்பாரதிக்கும், ‘கனவுச் சிறை’ நாவலுக்காக எழுத்தாளர் தேவகாந்தனுக்கு, ’நஞ்சுண்டகாடு’ நாவலுக்காக் குணா கவியழகனுக்கும் ‘கூலித்தமிழ்’ நாவலுக்காக முத்தையா நித்தியானந்தனுக்கும், ‘ஜாதியற்றவளின் குரல்’ நூலுக்காக ஜெயராணிக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருதை கே.வி.சைலஜாவும், சுவர்ணவேல் ஈஸ்வரனும் பெற்றுக் கொண்டனர். சுந்தர ராமசாமி நினைவு விருந்தான ’கணிமை விருது’ முத்தையா அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் வாசுகி கைலாசம் மற்றும் யுகேந்திரா ரகுநாதன் விருதுகள் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பங்குபெற உலகின் பல்வேறு பகுதியிலிருந்து தமிழர்கள் கலந்துகொண்டு விருது பெற்ற எழுத்தாளர்களை வாழ்த்தினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...