‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

முகத்தில் ‘ப்ளீச்’ செய்வது சரியா? தவறா?

தினமும் வேலைக்கு போகும் பெண்கள் தங்களுடைய சருமம் மற்றும் தலைமுடியை கண்டிப்பாக பராமரிக்க விரும்புவார்கள்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:39 am

உமா ஷக்தி.

தினமும் வேலைக்கு போகும் பெண்கள் தங்களுடைய சருமம் மற்றும் தலைமுடியை கண்டிப்பாக பராமரிக்க விரும்புவார்கள். முகத்திற்கு ப்ளீச்சிங், ஃபேஷியல் போன்றவற்றைச் செய்துக் கொள்கிறார்கள். இது சரியா? முகத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படுமா? 'தங்களை அழகாக வெளிப்படுத்திக் கொள்ள பெண்களுக்கு விருப்பம் உண்டும். ஆனால் கருப்பாக இருக்கிறேன் வெள்ளையாக மாற்ற முடியுமா என்று கேட்டு நிறைய பேர் வருவார்கள். ஆனால் கருப்பு அழகு என்று தன்னம்பிக்கையுடன் இருந்தால் நம்  ஆளுமை ஒரு படி உயரும். ஏனெனில்  தேவையற்ற கவர்ச்சிகளில் சிக்காமல், தெளிவாக சிந்திப்பவராக இருக்கும் போது மதிப்பு தானே உயரும். கருப்பு அழகா என்று சந்தேகத்துடன் கேட்காதீர்கள், கருப்பு வேண்டாம் என்று க்ரீம்களை முகத்தில் தடவி அது மேலும் பிரச்னைகளை தான் வரவழைக்கும். தவிர ப்ளீச்சிங் போன்றவற்றை அடிக்கடி செய்து கொள்ளும்போது சருமத்தில் சில பிரச்னைகள் ஏற்படலாம் ’ என்கிறார் சென்னை வடபழனி கேர் அன்ட் க்யூர் அரோமா தெரபிஸ்ட் கீதா அசோக்.

Story image

ப்ளீச்சிங் எப்படி செய்கிறார்கள்?

ப்ளீச்சிங் என்றால் பொதுவாக மக்கள் நினைத்துக் கொள்வது கறுப்பாக இருப்பவர்களை ஏதோ க்ரீம் போட்டு வெள்ளையாக்கிவிடுகிறார்கள் என்று. அது தவறு. பிறவியிலிருந்து இருக்கும் கருமை நிறம் ஒருபோதும் வெள்ளை நிறமாக மாறாது. ப்ளீச் செய்யும்போது, முகத்தில் இருக்கும் நுண்ணிய ரோமங்கள் யாவும் நிறம் மாறி பொன்னிறமாகிறது. அந்த மெல்லிய ரோமங்கள் தங்க நிறத்தில் மாறுவதால்தான் சருமம் பளிச்சென்று மாறுகின்றது. இந்த மாற்றமே முகத்தில் பளீரென்று தெரியுமே தவிர, சருமத்தில் ப்ளீச் எவ்வித நிற மாற்றத்தையும் ஏற்படுத்தாது.  நம் சருமத்தில் மெலனின் என்கிற நிறமி இருக்கும். அடிக்கடி ப்ளீச் செய்தால் அது பாதிப்புக்குள்ளாகிவிடும். தவிர  இயற்கையாக இருக்கும் முடியின் தன்மைமைய நிறமாற்றம் செய்ய ப்ளீச் செய்யும் போது, ஒரு கட்டத்தில்  சருமம் சீக்கிரம் முதிர்ச்சி அடைந்து வயோதிகத் தன்மை ஏற்பட்டுவிடும்.

ப்ளீச் செய்ய என்ன கெமிக்கல்கள் அதில் சேர்க்கப்படுகிறது?

லிக்விட் அம்மோனியம் மற்றும் ஹைட்ரஜன் ஃபராக்சைட் ஆகிய இரண்டு கெமிக்கல்கள் ப்ளீச் செய்ய பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

ப்ளீச் செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன?

சருமத்தில் தடிப்புக்கள் ஏற்படும்.  சருமம் தடிப்படையும். தொடர்ந்து செய்து கொள்பவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்படும்.கண்ணை சுத்தி மென்மையாக இருக்கும் பகுதியில் கருமை நிறம் படர்ந்துவிடும்.சிலருக்கு எதிர்மறையாகிவிடலாம். அதாவது கருமை நிறம் மாற ப்ளீச் செய்யத் தொடங்குவார்கள், ஆனால் மூன்றுவருடம் கழித்து கருமை நிறம் அதிகரிக்கலாம்.

ப்ளீச் போடப்படுகையில்,  பெண்களின் புருவத்தில், கண் இமைகள் மற்றும் தலை நெற்றி ஓரத்தில் இயற்கை முடியின் நிறம் மாறிவிடுவதுண்டு.முகத்தில் உள்ள நுண்ணிய முடிகளின் நிறம் மாறிவிடும். கருப்பான முகத்தில் தங்கநிற முடிகள் பளிச்சென்று தெரிய ஆரம்பிக்க முகத்தின் இயற்கை அழகு கெட்டுவிடும்.ப்ளீச்சிங் கெமிக்கல் என்பதால் அதிலுள்ள அமிலத்தன்மை சருமத்தின் இயற்கையான ஈரத்தன்மையை அகற்றிவிடும்.  இதனால் பெருமளவில் சருமம் வறட்சியடையும்.

எவ்வகையான சருமத்துக்கு ப்ளீச் செய்யக் கூடாது?

முக்கியமான நிகழ்ச்சியில் பங்குபெற போகும் போது எப்போதாவது ப்ளீச்சிங் செய்து கொள்ளலாம். ஆனால் நல்லத் தரமான ப்ளீச் க்ரீம்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று பரிசோதித்துவிட்டுத்தான் ப்ளீச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு முன் நம் சருமம் எத்தகையது என்று கண்டறிய வேண்டும்.  மிகவும் சென்சிட்டிவ் சருமம் உடையவர்கள் மற்றும் எண்ணெய்ப்பசை அதிகமுள்ள சருமம் உடையவர்கள் ப்ளீச் செய்து கொள்ளக்கூடாது. அப்படி மீறி செய்து கொண்டால் முகத்தில் கொப்பளங்கள் உடனடியாக வரும். எண்ணெய்த்தன்மையுடைய சருமம் உடையவர்கள் ப்ளீச் செய்தால் உடனடியாக தடிப்புகள் ஏற்பட்டு முகம் விகாரமாகிவிடும்.

Story image

ப்ளீச் யாருக்குத் தேவை?

மணப்பெண் திருமணத்திற்காக ஷாப்பிங் வெயிலில் போய் வரும்போது சருமத்தில் சற்றுக் கருமை படர்ந்துவிடும். இதை நீக்க தகுந்த ப்ளீச் செய்து கொள்ள முகம் பளிச்சென்றாகிவிடும். 

ப்ளீச் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை

ஒரு வாரத்துக்கும் முன்பே நிறைய தண்ணீர், இளநீர் அல்லது ஜூஸ் குடித்து உடலில் ஈரத்தன்மை (மாய்ஸ்ரைஸ் லெவல்) சரியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ப்ளீச் செய்தாலும் பாதிப்பு அதிகம் இருக்காது.

ப்ளீச் செய்த பின்

ப்ளீச்  செய்யப்படும் போது சருமத்தின்  சென்சிட்டிவிடி அதிகமாகும். இந்நிலையில் ப்ளீச்சிங் செய்து முடித்ததும் வெயிலில் போகும் போது, புற ஊதாக் கதிர்களின் தாக்கம் முன்பை விட அதிகமாக சருமத்தினுள் ஊடுருவி சருமம் பாதிப்புக்குள்ளாகும். ப்ளீச் செய்த பின் ஒருவாரத்துக்கு வெயிலில் போவதை தவிர்க்க வேண்டும்.

எஸ்பிஎஃப் 45 ஃபாக்டர் உள்ள சன் ப்ளாக் சருமத்தில் தடவி விட்டு வெயிலில் சென்றால் பாதிப்பு குறையும்.

ப்ளீச் செய்த அன்றைய இரவில் ஒரு பஞ்சு எடுத்து, அதை ரோஸ் வாட்டரில் முக்கி எடுத்து மென்மையாக துடைத்தப்பின் முகத்தை கழுவி விட்டு படுத்து கொள்ளவேண்டும்.

எந்த வயதிலிருந்து ப்ளீச்சிங் செய்யலாம்?

இருபது வயசுக்குப மேல் செய்து கொள்வது நல்லது.

நேச்சுரல் ப்ளீச் முறைகள் என்ன?

தேன் ஒரு ஸ்பூன், லெமன் ஜூஸ் கொஞ்சம், தயிர் ஒரு ஸ்பூன் மூன்றையும் கலந்து முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்துவிட்டு, முகத்தை நீரினால் கழுவினால் முகம் அன்றலர்ந்த தாமரைப் போல பளபளப்பாகிவிடும். தினமும் இதைச் செய்யலாம்.

கெமிக்கல் ப்ளீச்சிங்கால் ஏற்படும் தீமைகள், பாதிப்புகள் என்னென்ன?

எந்த ப்ளீச்சிலும் அமோனியா நிச்சயம் இருக்கும்.  அமோனியா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைட் இரண்டுமே ப்ளீச்சிங் ஏஜென்டுகள் தான். ஆனால் இவற்றை அப்படியே முகத்தில் தடவினால் நேரடி பக்க விளைவுகள் இருக்கும் எனவே அதன் வீரியத்தை மட்டுப்படுத்தி, அதே சமயம் அதன் செயலை மட்டும் தக்க வைக்க அதனுடன் வேறு சில க்ரீமையும் கலப்பார்கள்.  அந்த க்ரீம்கள் தரமானவையாக இருக்க வேண்டும். தரமான க்ரீமை கலந்து ப்ளீச்சிங் க்ரீம் தயாரிக்கப்படும் போது சருமத்தை அது ஓரளவு பாதுகாக்கும். தரமற்ற க்ரீம்களை கலக்கும் போது பாதிப்பு நிச்சயம் அதிகம் இருக்கும். கடைகளில் பொதுவாக செய்யப்படும் கோல்டன் ப்ளீச் என்பது கோல்டன் பேப்பர் ஃபாயில் கலந்து தயாரிக்கிறார்கள்.

ப்ளீச்  + கீரீம்  + ஆக்டிவேட்டர் ஆகியவற்றை குறிப்பிட்ட சதவிகிதத்தில் கலந்து முகத்தில் தடவுவார்கள். இயற்கையில் நல்ல நிறமாக இருப்பவர்களுக்கு ஐந்து நிமிடம் அதிகம் அல்லது குறைவாகப் போட்டாலும் பிரச்னை இருக்காது. ஆனால் கறுப்பாக இருப்பவர்களுக்கு இந்த ப்ளீச் க்ரீமை முகத்திலிருந்து சீக்கிரம் எடுத்துவிட வேண்டும். அதிக நேரம் இருந்தால் நல்ல நிறம் கிடைக்கும் என்ற தவறான புரிதல் நிலவுகிறது. முற்றிலும் செய்யக் கூடாத விஷயம் இது. சருமத்தில் இருக்கும் மென்மையான முடிகள் தங்க நிறத்தில் மாறி அழகு என்பது அவலட்சணமாகி விடும்.

சமீபத்தில் புதுவகையாக நிறைய ப்ளீச்சிங் வந்துள்ளது. அவை

லாக்டோ ப்ளீச் - பாலிலிருந்து லாக்டிக் அமிலத்தைப் பிரித்தெடுத்து தகுந்த க்ரீமுடன்  கலந்து செய்யப்படும் ப்ளீச் இது.  இதில் அமோனியம் இல்லாததால் பிரச்னை இல்லை. பால் பொருட்களுக்கு இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக்கும்ம் தன்மை உண்டு.

என்ஸைம் ப்ளீச் - பப்பாளி, அன்னாசி பழம், ஸ்ட்ராபெர்ரி, மற்றும் மஞ்சள் பூசணி ஆகியவை என்சைம் அதிகம் உள்ள பழங்கள். இது சருமத்துக்கு மிகவும் நல்லது. இந்தப் பழங்களிலிருந்து என்சைமைப் பிரித்து பெளடர் வடிவத்தில் தயாரிப்பார்கள். அதைப் பயன்படுத்தலாம்.

ஃப்ரூட் ப்ளீச் - மேல் சொன்ன அதே முறையில் சில பழங்களிலிருந்து  அமிலத்தைப் பிரித்து எடுத்து ப்ளீச் க்ரீமுடன் சேர்த்துச் செய்வார்கள். திராட்சை, ஆப்பிள் அல்லது மிக்ஸட் ப்ரூட்ஸ் என்று தேவைக்கேற்ப பழங்களிலிருந்து ஆசிட் பிரித்தெடுத்து அதில் க்ரீமுடன் மிக்ஸ் செய்து முகத்தில் போடுவார்கள்.

எந்த ப்ளீச்சானாலும், அதை அடிக்கடி எடுத்துக் கொள்வது தான் கூடாது. எப்போதாவது செய்து கொள்வதில் தவறில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.