ஷேக்ஸ்பியர் -அவர் இங்கிலாந்து நாட்டு இளங்கோ; நம் இளங்கோ முடி துறந்து, நாடகம் தீட்டினார். ஷேக்ஸ்பியரோ நாடகம் எழுதி புகழ் முடியைத் தனக்குப் புனைந்து கொண்டார். மனித மனங்களின் ஆழ அகலங்கள் அவர் வரிகளால் வரையப்பட்டன. ஆங்கில மொழியைத் தாங்கும் தூண்களாய், அவர் நாடக நூல்கள் நிமிர்ந்து நிற்கின்றன. போலி வார்த்தைகளின் பொய்த்தனமாக இருந்த நாடக மேடைகளை ஷேக்ஸ்பியரின் பொன் வரிகளே சித்திர மண்டபங்களாய்ச் செப்பமிட்டன.
அன்பு, பரிவு, மகிழ்ச்சி, லட்சியம், வெறுமை, பொறாமை, பேராசை மற்றும் துக்கம் போன்ற மனிதர்களின் உணர்வுகள் குறித்த ஆய்வில் ஷேக்ஸ்பியர் தனது 37 நாடகங்களின் வாயிலாக ஆழ்ந்த முடிவுகளைக் கொண்டிருந்தார்.
ஷேக்ஸ்பியரின் கல்வி குறித்து மிகுதியாக அறிய முடியவில்லை. அவருடைய தாயார் அவருக்குக் கிரேக்கப் பழங்கதைகள் மற்றும் தேவதைக் கதைகளைக் கூறியிருக்கலாம். அவற்றில் சில அவருடைய நாடகங்களில் அவர் குறிப்பிடுவதையும், மேற்கோளும் மிகவும் காட்டப்படுகின்றன.
அவர் படித்த முதல் பள்ளியில் எழுத்துகள், எண்கள் மற்றும் இறைவனின் பிரார்த்தனையைக் கொண்ட குழந்தைகளுக்கான அரிச்சுவடி மூலம் தொடக்கக் கல்வியைக் கற்றுக் கொண்டார்.
பின்னர், அவர் இரண்டாவதாக, கிங்ஸ் பிளேசில், லத்தீன் மற்றும் செவ்வியல் இலக்கியங்கள் குறித்த அறிவைப் பெற்றதனால், அவரது நாடகங்களில் நல்ல விளைவு ஏற்பட்டது. அவரது கதைக் களங்களுக்கான சில சிந்தனைகள் புளூடார்க்கின் வாழ்க்கை மற்றும் ஹோலின்ஷெட் வரலாற்றிலிருந்து அவர் பெற்றார். அப்போது அவருக்கு வாய்த்த சில ஆசிரியர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பட்டதாரிகள் ஆவார்கள்.
ஷெல்லி தனது "வானம்பாடி' என்ற கவிதையில் பின்வரும் வரிகளை எழுதியபோது அவர் ஷேக்ஸ்பியரை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
"நான் மறைந்த கவிஞன் போல அதை
நம்ப முனைகிறேன்.
சிந்தனையின் வெளிச்சத்தில்,
தடையற்ற பாடல்களைப் பாடுவதில்,
உலகை உருவாக்குவதற்கு,
நம்பிக்கையுடன் கூடிய ஒத்துணர்வு
சில நிலைகளில் தேவையில்லை'.
இந்த வரிகளை எழுதும்போது,
கவிஞர்கள் அவர்களின் சொந்த ஆக்கபூர்வமான தூண்டுதலைத் தெரிவிப்பதற்கு உலகம் அவர்களைக் கவனிக்கும் வரை, யாரும் கேட்காமலேயே கவிதைகளைத் தாமாக எழுதுகிறார்கள், வானம்பாடிப் பறவையும் அதே போல் அதன் மெல்லிசைப் பாடல்களை எவரும் அழைக்காமலேயே பாடுகிறது.
நாடகங்களை எழுதுவதற்கும் ஷேக்ஸ்பியரை யாரும் வற்புறுத்தவில்லை. அவர் தனது சொந்த மகிழ்ச்சிக்காகவும் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காகவும் எழுதினார்.
ஷேக்ஸ்பியர் மீது இந்தியர்களின் அளவு கடந்த ஈடுபாட்டை நோக்கும்போது, பிரிட்டனின் பலவண்ண வரலாற்றின்பாலோ, பேரரசாக உயர்ந்தது குறித்தோ, பிரித்தானிய நாகரிகத்தின் மேலெழுந்தவாரியான பெருமைகளின்பாலோ பெரும் மதிப்பு கொண்டு விட்டதாக எவரும் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஷேக்ஸ்பியர் எழுதிய 37 நாடகங்களில், 34 நாடகங்கள் தமிழில் பல நிலைகளில் பல அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
1870-ஆம் ஆண்டு முதன்முதலாக, தலைமைச் செயலகத்தின் மொழிபெயர்ப்பாளராக விளங்கிய வி. விசுவநாதப் பிள்ளை, "வணிகபுரி வணிகன்' என்னும் நாடகத்தைத் தமிழாக்கம் செய்தவராவார். நாடகக்கலைத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களான, "அமலாதித்தியன் (ஹேம்லட்), மகபதி (மேக்பத்), ஒத்தெல்லோ ஆகியவற்றை மேடை நாடகங்களாக நடத்திய பெருந்தகையாவார். நீதியரசர் மகராஜன், பல ஷேக்ஸ்பியர் நாடகங்களைத் தமிழாக்கம் செய்த அறிஞராவார்.
இலங்கையைச் சேர்ந்த விபுலானந்த அடிகள் ஆங்கிலப் புலவர்களுள் சூளாமணியாகத் திகழும் செகசிற்பியருக்கு (சேக்சுபியர்) "மதங்க சூளாமணி' எனப் பெயரிட்டார். மதங்கர் என்பது கூத்தரைக் குறிக்கும் சொல்லாகும். சூளாமணி என்பது மகுடத்தில் அணியும் மாமணி எனப் பொருள்படும். செகசிற்பியருக்கு "மதங்க சூளாமணி' எனச் சுவாமிகள் பெயரிட்டது பொருத்தமாகும்.
மதங்க சூளாமணி என்னும் நூலில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் சேக்சுபியர் என்னும் பெயரைச் "செகசிற்பியர்' எனவும் மாக்பெத், டன்கன், ஆத்ரே, போரெஸ்டர், ரோமியோ, ஜூலியட் முதலிய பெயர்களை முறையே "மகபதி, இடங்கன், ஆதிரை, இரம்மியன்', சுசிலை எனத் தமிழாக்கம் செய்தார்.
சேக்சுபியர் நாடகங்களில் பன்னிரண்டினைத் தாமே விரும்பித் தேர்ந்த நிலையில் அவற்றின் சிறப்பியல்புகளை "எடுத்துக்காட்டியல்' என்னும் இயலில் ஒப்பீட்டு வகையில் ஆராய்ந்துள்ளார். இந்நூல் மூன்று இயல்களைக் கொண்டது. இதன் முதலாம் இயலாகிய "உறுப்பியலில்' நாடக இலக்கணம் பற்றித் தமிழ் இலக்கண நூல்களும் சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங்களும் காட்டும் கருத்துகள் விரித்துரைக்கப்பட்டுள்ளன.
செகசிற்பியரின் நாடகங்களில் வரும் கருத்துச் சுவைமிக்க தொடர்களை மூலச்சுவை குன்றாத வண்ணம் எவ்வாறு தமிழாக்கம் செய்தார் என்பதற்கு ஒரு சான்று காணலாம்.
எந்நாட்டவராலும், எக்காலத்தவராலும் ஒருமித்த குரலில் இம்மண் கண்ட மா மேதை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவர் சேக்ஸ்பியர் ஒருவர் மட்டிலுமே.
ஷேக்ஸ்பியர் இன்று மட்டுமல்ல, பென் ஜான்சன் எழுதியது போலவும் எக்காலத்துக்கும் பொருத்தமானவர்!
கட்டுரையாளர்:
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை,
தமிழ்நாடு அரசு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக - அதிமுக நேரடிப் போட்டியில் குறிஞ்சிப்பாடி

சேந்தமங்கலம், கீழ்பாகம் பகுதிகளில் திமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்

ஆனந்தரங்கரும் பாவேந்தரும்...

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர்!
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


