கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தினமணி வாசகர்களுக்கு ‘உலக சுற்றுலா தினப்போட்டி’ என்ற பெயரில் சுற்றுலா அனுபவப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தோம். போட்டிக்கு கட்டுரைகள் அனுப்புவதற்கான இறுதித் தேதி ‘அக்டோபர் 5’ நேற்றோடு நிறைவுற்றது. இதுவரை வாசகர்கள் அனுப்பியுள்ள சுற்றுலாக் கட்டுரைகள் அனைத்துமே மிக அருமை. அவற்றில் எதை விடுவது? எதைத் தேர்ந்தெடுப்பது என்று திண்டாட்டமாகத்தான் இருக்கிறது. எனவே முன்பே அறிவித்தபடி மூன்று சிறப்புப் பரிசுகளோடு மேலும் இரு சிறப்புப் பரிசுகளை இணைத்து மொத்தம் 5 சிறப்பான சுற்றுலாக் கட்டுரைகள் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படவிருக்கின்றன என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பரிசுக்குரிய கட்டுரைகள் குறித்த அறிவிப்பு செவ்வாயன்று (9/10/2018) தினமணி இணையதளத்தில் வெளியிடப்படும். அத்துடன் பரிசுக்குரிய கட்டுரைகள் ஒவ்வொன்றாக தினமணி இணையதளத்தின் சுற்றுலா பிரிவிலும், லைஃப்ஸ்டைல் ’பயணம்’ பிரிவின் கீழும் தொகுக்கப்பட்டு திங்கள் அன்று வெளியிடப்படும். சுற்றுலா புகைப்படங்கள் அனைத்தும் அவற்றுக்குரிய வாசகர்களது பெயர்களுடன் தினமணி இணையதளத்தின் புகைப்படப் பிரிவின் கீழ் கேலரியாகத் தொகுக்கப்படும் என்பதையும் வாசகர்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
தினமணி இணையதளத்தின் மாதாந்திர போட்டிகள் அத்தனையிலும் பெரும் உற்சாகத்துடனும் முனைப்புடனும் இதுவரை பங்கு பெற்ற இனியும் பங்கேற்கக் காத்திருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.
மீண்டும் அடுத்த போட்டியில் சந்திப்போம்
நன்றி
தினமணி இணையதளம்
Related Article
‘உலக சுற்றுலா தினப்போட்டி’ வாசகர் தம் சுற்றுலா அனுபவங்களைப் பகிர அக்டோபர் 5 இறுதித் தேதி !
தினமணி இணையதளத்தின் மார்ச் மாதப்போட்டியில் பட்டுப் புடவை பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகள்!
தினமணி கொடுத்த பரிசுத் தொகையை வென்றவர்கள் இவர்கள்தான்!
தினமணி குரூப் ஃபோட்டோ போட்டி முடிவுகள் மற்றும் பரிசு பெற்றோர் பட்டியல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இது தெரியுமா? பிளாஸ்டிக் நாற்காலியில் உட்காரும் பகுதியில் ஓட்டை இருப்பது ஏன்?

இனியாவது ஜன நாயகன் வெளியாகுமா?
இந்த வார ஓடிடி படங்கள்!

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


