தினமணி இணையதளம் , ஐநாக்ஸ் திரையரங்குடன் இணைந்து நடத்திய ‘பொங்கலோ பொங்கல்’ ரங்கோலி போட்டியின் இறுதிச் சுற்று இன்று சென்னை விருகம்பாக்கம் ஐநாக்ஸ் திரையரங்க வளாகத்தில் இனிதே நடந்து முடிந்தது.
இறுதிச் சுற்றுக்கென தேர்வான 10 போட்டியாளர்களும் மிகுந்த ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் மிக அருமையாகத் தயாராகி வந்திருந்தனர். அது மட்டுமல்ல, முதல் சுற்றுக்கென அனுப்பிய ரங்கோலிகளை விட மிக, மிக அற்புதமான ரங்கோலிகளைத் தந்து நடுவர் மற்றும் சிறப்பு விருந்தினராக வந்திருந்து நிகழ்ச்சியைக் கெளரவித்த விஜய்ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களை மனங்குளிரச்
செய்து விட்டனர்.
அனைத்து ரங்கோலிகளும் அழகாகவே இருந்தாலும் போட்டி என்றால் முதல் மூன்று இடங்களைத் தேர்ந்தெடுத்தாக வேண்டுமில்லையா?! ரங்கோலி போட்டியின் நடுவர், க்ரேயான்ஸ் நெட்வொர்க் விளம்பர நிறுவனத்தின் தென் பிராந்திய துணைத்தலைவர் தன்னுடைய 25 வருட விளம்பர உலக அனுபவத்தைக் கொண்டு நமது வாசகிகள் இட்ட ரங்கோலிகளில் அவர்கள் செலுத்திய ஈடுபாட்டையும் நேர்த்தியையும் கவனத்தில் கொண்டு இறுதியாக மூன்று பரிசுகள் அல்ல ஐந்து பரிசுகளை அறிவிக்கப் பரிந்துரைத்தார்.
அதன்படி முதல் 5 இடங்களுக்குத் தேர்வான வாசகிகள்...
முதல் பரிசு:
வனஜா ராதாகிருஷ்ணன்
பரிசுத் தொகை ரூ.5000
பரிசுக்குரிய ரங்கோலி...
இரண்டாம் பரிசு:
அனுராதா கமலக் கண்ணன்
பரிசுத்தொகை ரூ.3000
பரிசுக்குரிய ரங்கோலி...
மூன்றாம் பரிசு:
ஷாலினி முகுந்தன்
பரிசுத்தொகை ரூ.2000
பரிசுக்குரிய ரங்கோலி...
நான்காம் பரிசு:
ரெமா ரமணி
பரிசுத் தொகை ரூ.1000
பரிசுக்குரிய ரங்கோலி...
ஐந்தாம் பரிசு
சந்திரா ரங்கராஜன்
பரிசுத்தொகை ரூ.1000
பரிசுக்குரிய ரங்கோலி...
பரிசு பெற்றவர்கள் தவிர, நிகழ்வில் கலந்து கொண்ட இறுதிச் சுற்றுப் போட்டியாளர்கள் அனைவருக்குமே தினமணியின் பிரத்யேகப் பரிசுகளும், ஐநாக்ஸ் திரையரங்கில் திரைப்படம் கண்டு மகிழ தலா இரண்டு திரைப்பட நுழைவுச் சீட்டுகள் மற்றும் சென்னை டயமண்ட்ஸில் வைர நகை வாங்க 9000 ரூ தள்ளுபடிக் கூப்பன்களும் வழங்கப்பட்டன.
இன்றைய நிகழ்வு இனிதே நடந்து முடிந்தது.
போட்டியில் வெற்றி பெற்றோர் மற்றும் கலந்து கொண்ட வாசகிகள், திரையரங்க வளாகத்தில் ரங்கோலிகளைக் கண்டுகளித்த திருவாளர் பொதுஜனங்கள் அனைவருக்கும் தினமணியின் மனம் நிறைந்த நன்றிகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்
கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

