நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அரசியலுக்கு வருவது எப்போது? 2013-ல் நடிகர் விஜய்யின் பதில்!

முதல்வர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி... அரசியலுக்கு வருவது எப்போது? என்பது பற்றி, 2013 ஆம் ஆண்டில் நடிகர் விஜய்யின் பேச்சு...

News image

திருச்சியில் நடைபெற்ற 15 ஜோடிகளுக்கான திருமண விழாவில் மணமக்களை வாழ்த்துகிறார் நடிகர் விஜய். - (தினமணி கருவூலத்திலிருந்து...)

Updated On :19 ஜூன் 2026, 4:00 pm IST

திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் நற்பணி இயக்கம் சார்பில் தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் 15 ஏழை ஜோடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணத்தை நடத்தி வைத்த பின்னர், ரசிகர்கள் சார்பில் எழுதி கொடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்து பேசும்போது அவர் இதை குறிப்பிட்டார்.

இந்த விழாவில் அவர் பேசுகையில், “இதுபோன்ற திருமண விழாக்களை நடத்துவது வைத்து அரசியலுக்கு வருவது எப்போது எனக் கேட்கிறீர்கள். இதற்கும், அரசியலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மன திருப்திக்காக இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

நான் நடித்து விரைவில் வெளியாக உள்ள தலைவா படம் அரசியல் படமல்ல. முழு ஆக்சன் படம். மிகவும் நன்றாக வந்துள்ளது. தலைவா என்று என்னை நீங்கள் சொல்லும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

உண்மையில் நீங்கள்தான் (ரசிகர்கள்) எனக்குத் தலைவர். எனது மகன் சஞ்சய் என்னவாக வருவார் என்று இப்போது சொல்ல முடியாது. போகபோகத்தான் தெரியும்” என்றார் நடிகர் விஜய்.

15 ஜோடிகளின் திருமணத்தை நடத்தி வைத்த நடிகர் விஜய் அவர்களுக்கு 51 வகையான சீர்வரிசைப் பொருள்களை வழங்கி வாழ்த்தினார். இந்த விழாவுக்கு நற்பணி இயக்க நிர்வாகி குடமுருட்டி கரிகாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மணமக்களை வாழ்த்தி நடிகர் விஜய் பேசுவதாக இருந்தது. ஆனால், ரசிகர்களின் கூச்சல் தொடர்ந்து இருந்ததால் அவர் பேசவில்லை. முன்னதாக, சென்னையிலிருந்து வேனில் வந்த நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

[2013 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதியிட்ட தினமணி நாளிதழின் பக்கத்திலிருந்து...]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.