பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதா? - கார்த்திகா கைதுக்கு பிரேமலதா கண்டனம்!மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

தனுஷ் - 56 பூஜையே மாநாடு மாதிரி இருக்கிறது: வடிவேலு

தனுஷ் - 56 பூஜையில் நடிகர் வடிவேலு பேச்சு...

Updated On :

நடிகர் வடிவேலு தனுஷ் - 56 திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாரநாடு கருப்பணசாமி கோயிலில் பூஜையுடன் மிகப் பிரம்மாண்டமாக இன்று காலை தொடங்கியது.

இந்த பூஜையில் பங்கேற்ற நடிகர் தனுஷ், கருப்பணசாமிக்கு 18 அடி அரிவாள் காணிக்கையாக வழங்கினார். நிகழ்வில் நடிகர்கள் வடிவேலு, எஸ். ஜே. சூர்யா, பிரீத்தி முகுந்தன் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும், நடிகர் தனுஷைக் காண மாரநாடு கருப்பணசாமி கோயிலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். இதனைக் கண்ட நடிகர் வடிவேலு, “காரில் வரும்போதே எண்ண முடியாத அளவிற்கான கார்களை பார்த்தேன். திரைப்படத்தின் பூஜையே மாநாடு போல் இருக்கிறது. இவ்வளவு ரசிகர்கள் இருப்பார்கள் என நினைக்கவில்லை. மிரண்டுவிட்டேன். உங்கள் அன்பும் ஆசீர்வாதமும் தேவை” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.