இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

பிரான்ஸிலும் மறுவெளியீடாகும் திருப்பாச்சி!

திருப்பாச்சி திரைப்படம் ஃபிரான்ஸில் வெளியாகிறது...

Updated On :

முதல்வர் விஜய்யின் திருப்பாச்சி திரைப்படம் ஃப்ரான்ஸில் மறுவெளியீடாகிறது.

சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பேரரசு இயக்கத்தில் முதல்வர் விஜய் நடிப்பில் உருவான திருப்பாச்சி திரைப்படம், கடந்த 2005 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது.

திருப்பாச்சியிலிருந்து சென்னைக்குத் திருமணமாகிச் சென்ற தன் தங்கைக்கும், தங்கையின் கணவருக்கும் ரௌடிகளால் பிரச்னை ஏற்பட, அதை தீர்க்கச் செல்லும் அண்ணனாக விஜய் நடித்திருந்தார். நாயகியாக நடிகை த்ரிஷாவும் முக்கிய கதாபாத்திரங்களில் பசுபதி, மல்லிகா, கோட்டா ஸ்ரீனிவாச ராவ் நடித்திருந்தனர்.

திருப்பாச்சி படத்தில் அண்ணன் தங்கை பாசம் ரசிகர்களை அதிகளவில் ஈர்த்தது. இப்படம் வெளியான போது, தமிழகம் முழுவதும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

Story image

இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், வரும் அக்டோபர் 1 ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு (Re-Release) ஆகிறது. இந்த நிலையில், திருப்பாச்சி பிரான்ஸில் அக். 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில திரைகளில் இதற்கான டிக்கெட் விற்பனைகளும் நடைபெற்று வருகின்றன.

Vijay's film Thirupachi is being re-released in France.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.