இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

உள்ளாடை மட்டுமே அணிந்து சண்டைக்காட்சி... விளாசிய ராதிகா ஆப்தே!

கவர்ச்சியாக நடிப்பது குறித்து ராதிகா ஆப்தே பேச்சு...

ராதிகா ஆப்தே

Updated On :

நடிகை ராதிகா ஆப்தே சினிமாவில் கவர்ச்சி குறித்து பேசியுள்ளார்.

தமிழில் ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் பாலிவுட் பட உலகில் ராதிகா ஆப்தேவின் படங்களுக்கும் கருத்துகளுக்கும் தனி ரசிகர்களே உண்டு. 

பெண்ணியம் மற்றும் அரசியல் பார்வைகளைக் குறித்து அதிரடியாக பேசுபவர். மராத்தி, பெங்காலி, தெலுங்கு, மலையாளத்திலும் நடித்துள்ளார். அண்மையில், இவர் நடிப்பில் உருவான லஸ்ட் ஸ்டோரிஸ் - 3 தொடரும் வெளியானது. இதிலும், சர்ச்சையான கதையில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகை ராதிகா ஆப்தே, ”ஒரு நடிகர் நெருக்கமான மற்றும் கவர்ச்சியான காட்சிகளில் முன்பு நடித்திருக்கிறார் என்பதற்காக மட்டும் அதே மாதிரியான காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொள்வார் என நினைக்கக் கூடாது. படத்தின் வெற்றிக்காக நடிகர்களின் எல்லையையும் தனிப்பட்ட கட்டுப்பாடுகளையும் மீறி அழுத்தம் கொடுப்பது தவறு. சில திரைப்படங்களில் கதைக்கு தொடர்பில்லாத வகையில் நெருக்கமான காட்சிகளில் நடிக்குமாறு என்னை வற்புறுத்தியுள்ளனர்.

முக்கியமாக, ”ஒரு திரைபடத்தில் நடித்த போது, சண்டைக் காட்சிகளில் உள்ளாடை மட்டும் அணிந்து நடிக்க முடியுமா என்று கேட்டனர். இதனால் நாம் என்ன சாதிக்கப் போகிறோம்? என நினைத்துக்கொண்டு முடியாது என உறுதியுடன் மறுத்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Radhika Apte has spoken about glamour in cinema.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.