வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதி‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவு

மூக்குத்தி அம்மன் - 2 இதுவரை சந்திக்காத உழைப்பு: சுந்தர். சி

மூக்குத்தி அம்மன் - 2 குறித்து சுந்தர். சி பேச்சு...

சுந்தர். சி

Updated On :

இயக்குநர் சுந்தர். சி மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகைகள் நயன்தாரா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படம் வருகிற நவ. 6 ஆம் தேதி தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில், இதன் முன்வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில், சுந்தர். சி, குஷ்பு, ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வழக்கம் போல், நடிகை நயன்தாரா நிகழ்வில் பங்கேற்கவில்லை.

நிகழ்வில் பேசிய இயக்குநர் சுந்தர். சி, “மூக்குத்தி அம்மன் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. படத்தின் பெயர், வேல்ஸ் தயாரிப்பு, நடிகைகள் நயன்தாரா, ஊர்வசி ஆகிய விஷயங்கள் மட்டுமே தொடர்புடையவை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறோம். நான் வேறு எந்தத் திரைப்படங்களுக்கும் இப்படி உழைத்தது இல்லை. அப்படியொரு உழைப்பு.

இப்படத்திற்காக நடிகை நயன்தாரா விரதம் இருந்து நடித்தார். இவ்வளவு பெரிய நட்சத்திரம் இப்படியெல்லாம் செய்வார்களா என ஆச்சரியமாக இருந்தது. படம் நல்லபடியாகத் தொடங்க வேண்டும் என பொள்ளாச்சியிலுள்ள மாசாணியம்மன் கோவில் சென்று வேண்டுதலும் செய்தார். நடிகைகள் ரெஜினா கேஸண்ட்ரா மற்றும் ஊர்வசி ஆகியோரும் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளனர். என் தம்பி ஹிப்ஹாப் ஆதியின் இசை மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் உள்பட சிலர் ஆதியின் இசையைப் பாராட்டினர்.

Story image

வழக்கமான அம்மன் திரைப்படம் என்றால் குழந்தையை, ஊரைக் காப்பாற்றும் கதையாக இருக்கும். ஆனால், மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படம் அம்மன் தன்னையே காப்பாற்றும் கதையாக உருவாகியுள்ளது. இதுதான் இதன் சிறப்பு. டிரைலரை பார்த்துவிட்டு கிராபிக்ஸ் சரியில்லை என விமர்சனங்கள் எழுந்ததைக் கவனித்தேன். தமிழகத்தைச் சேர்ந்த 400 விஎப்எக்ஸ் கலைஞர்கள் இப்படத்திற்காகப் பணியாற்றியுள்ளனர். திரைப்படத்தைப் பார்க்கும்போது நன்றாக இருந்தால் பாராட்டுங்கள். சரியில்லை என்றால் தட்டிக்கொடுத்து கூறுங்கள்; கற்றுக்கொள்கிறோம். இந்த தீபாவளிக்கு அம்மனின் அருளோடு அனைவரது வாழ்க்கையும் செழிக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Director Sundar C. has spoken about the film Mookuthi Amman 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.